நாடாளுமன்றத்தில் ‘ஸிக்கா’ அமைச்சர்நிலை அறிக்கை, விவாதம்

நாடாளுமன்றம் வரும் செவ்வாய்க் கிழமை கூடும்போது, சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள 'ஸிக்கா' பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லியும் அமைச்சர்நிலை அறிக்கைகளை வெளியிடுவார் கள். 'ஸிக்கா' பரவல் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 12 நாடாளுமன்றக் கேள்விகளோடு, அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. இதுவரை 292 பேர் 'ஸிக்கா' கிருமியால் நோய்வாய்ப்பட்டதாகச் சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெரிவித்தன.

'ஸிக்கா' கிருமியால் தாய்மா ருக்கும் குழந்தைகளுக்கும், ஆரோக்கியமான மற்றவர்களுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக் கண் காணிக்க போர்ட்டோ ரிக்கோவில் அமைக்கப்பட்டதைப் போல சிங்கப்பூரிலும் தேசிய ஸிக்கா பதி வகம் அமைப்பது பற்றி சுகாதார அமைச்சு பரிசீலிக்குமா என திரு அலெக்ஸ் யாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட வட்டாரங் களின் குடியிருப்பாளர்களுக்கு இலவச 'ஸிக்கா' பரிசோதனை வழங்க முடியுமா என்றும் 'ஸிக்கா' தொற்றியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் கர்ப்பிணிக ளுக்கு என்ன ஆதரவளிக்கப்படும் என்றும் திருவாட்டி டின் பெய் லிங் கேள்வி கேட்டுள்ளார். 'ஸிக்கா' பரவலால் சுற்றுப் பயணத்துறைக்கும் உள்ளூர் பொருளியலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த என்னென்ன உத்திகள் கையா ளப்படும் என நியமன நாடாளு மன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் ரண்டால்ஃப் டான் வர்த்தகத் தொழில் அமைச்சிடம் கேட்டிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!