பாலர் பள்ளிகளில் புதிய தாய்மொழி பாடத்திட்டங்கள்

சிங்கப்பூர் பாலர் பள்ளி ஆசிரி யர்களின் பயிற்சித் திட்டத்தில் தாய்மொழி பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட உள்ளன. நிபுணத்துவ மேம்பாட்டுத் திட் டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் 14 தாய்மொழி பாடத்திட்டங் களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்கள் பெரும்பங்காற்ற இத்திட்டம் உத வும். குழந்தைகளின் தாய்மொழி கற்றலை ஆதரிக்கும் வண்ணம் ஆசிரியர்கள் தங்களது திறன் களை வலுப்படுத்திக்கொள்ளவும் இது உதவிபுரியும் என ஆரம்ப கால குழந்தைப்பருவ மேம்பாட்டு முகவை தெரிவித்தது.

இந்த முகவையின் நிபுணத் துவ மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மூன் றாண்டு காலத்தில் 180 மணி நேர பயிற்சிக்குச் செல்ல வேண்டி இருக்கும். இதற்கான அறிவிப்பை சமு தாய, குடும்ப மேம்பாட்டு அமைச் சர் டான் சுவான் ஜின் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித் திருந்தார். அப்போது முதல் அத்திட்டத்திற்கான தொடக்கக் குழுவை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அக்குழுவில் 138 பாலர் பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமனம் பெற்றனர். தாய்மொழிப் பாடத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 18 மணி நேர பயிற்சிகளைக் கொண்டவை. தமிழ் இலக்கியம் மற்றும் செய் யுள், சீன மொழி உச்சரிப்பு, மலாய் மொழியியல் போன்ற வற்றை உள்ளடக்கியதாக அந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும். காட்சி விளக்கம் தொடர்பான 60 மணி நேர பாடத்திட்டம் ஒன்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.

ஹேக் ரோட்டில் உள்ள பாலர் பள்ளி ஒன்றுக்கு நேற்று வருகை அளித்த அமைச்சர் டான் சுவான் ஜின், வருங்காலத்தில் கூடுத லான பாடத்திட்டங்கள் சேர்க்கப் படக்கூடும் எனக் கூறினார். மூன்றாண்டு பயிற்சி வழங் கும் நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டம் வேலையிடத்தில் பாலர் பள்ளி ஆசிரியர்களை பொறுப்பு மிக்கவர்களாக ஆக்க உதவிடும். "தாய்மொழியை வலுவாக்கு வது அவசியம். ஏனெனில் மொழியின் அடிப்படை காலங்கள் மிகவும் முக்கியமானவை என் பதை நாம் அறிந்துள்ளோம்," என்றார் அமைச்சர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!