விதிமீறல் குற்றச்சாட்டு

போக்­கு­வ­ரத்­துக்கு எதிர்த்­திசை­யில் சென்ற­து­டன் அனு­ம­திக்­கப்­பட்­டதை­விட மூன்று மடங்கு வேகத்­தில் அபா­ய­க­ர­மாக ஓட்­டிச்­சென்ற மோட்­டார்சைக்­கி­ளோட்டி ஒருவர் நீதி­மன்றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளார். சென்ற ஜூலை மாதம் 6ஆம் தேதி அதிகாலை 2.45 மணி­ய­ள­வில் 23 வயது ஆடவர் ஒருவர் யீ‌ஷூன் அவென்யூ 1ல் போக்­கு­வ­ரத்­துக்கு எதிர்த்­திசை­யில் மோட்­டார்சைக்­கிளை ஓட்­டிச்­சென்றார். அது­கு­றித்து அதி­கா­ரி­கள் கேள்­வி­யெழுப்­பவே, அவர் பாதையை மாற்றி மணிக்கு 167கிமீ. வேகத்­தில் மோட்டார் சைக்கிளை ஓட்­டிச்­சென்று பின் கைதானார்.

Loading...
Load next