பெட்ரோல் குண்டுவீச்சு; நால்வர் கைது

இசை, மதுக்கூடம் ஒன்றை 'மோலோடோவ் காக்­டெய்ல்' எனும் பெட்ரோல் குண்டை வீசி தீப்­பற்­ற வைக்க முயற்சி செய்­த­தாக நான்கு சந்தேக நபர்­கள் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. சென்ற செவ்­வாய்க்­கிழமை அதிகாலை வேளையில் இந்தச் செயலைப் ­பு­ரிய அவர்­கள் முயற்சி செய்­த­தாக நேற்று நீதி­மன்றத்­தில் கூறப்­பட்­டது. 26 வயதான டோ வென் யி, பிரையன் ஹோ சாங் ரோங், 23 வயதான யூஜின் லிம் ஹுவாங் ஷென், சிஃபாஸ் ஹோ ஜின் ஆன் ஆகிய நால்வர் அந்த சந்தேக நபர்­கள். செவ்­வாய்க்­கிழமை அதிகாலை 2.10லிருந்து 2.26க்கு இடைப்­பட்ட நேரத்­தில் 'செயின்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டே­ஷ­னில்' உள்ள 'பௌன்ஸ்' எனும் இசை, மதுக்கூடத்­தின் முதன்மை நுழை­வு­வா­யி­லில் நான்கு பெட்ரோல் குண்­டு­களை வீச இந்த நால்­வ­ரும் 26 வயதான டேரில் டே காய் லோங் என்­ப­வ­ரு­டன் சேர்ந்து செயல்­பட்­ட­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. அவர்­கள் மத்திய போலிஸ் பிரிவில் விசா­ரணைக்­காக ஒரு வாரம் காவலில் வைக்­கப்­படு­வர்.

சம்பவ இடத்­தில் கண்­ணா­டித் துண்­டு­கள் கிடந்ததை போலிஸ் அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர். மூவர் பெட்ரோல் நிரப்­பப்­பட்ட நான்கு மதுபான போத்­தல்­களைத் தீப்­பற்­றவைத்து எரிந்­து­விட்டு அவ்­வி­டத்தை­விட்டு அகன்ற­தாக விசா­ரணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. யாருக்­கும் காயம் இல்லை. குற்­ற­வி­யல் விசா­ரணைத் துறை, போலிஸ் புலனாய்­வுத் துறை, கிள­மெண்டி பிரிவு ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் இணைந்து பணி­யாற்றி சந்தேக நபர்­களுள் ஒருவரை 20 மணி நேரத்­துக்­குள் கைது செய்­த­னர். மற்ற மூவரும் செவ்வாய், புதன் கிழமை­களில் பிடி­பட்­ட­னர். 2016-09-16 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!