ஸிக்கா: 14 புதிய சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று 14 புதிய ஸிக்கா தொற்றுச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து இதுவரை 369 ஸிக்கா சம்பவங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் செங்காங் சென்ட்ரல், செங்காங் ஈஸ்ட் அவென்யூ பகுதிகளில் வசிக்கும் இருவருக்கு ஸிக்கா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அவை புதிய ஸிக்கா தொற்று இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூ செங் ஸிக்கா தொற்றுப் பகுதிக்கு உட்பட்ட வெர்னன் பார்க்கிலும் ஒருவருக்கு புதிதாக ஸிக்கா தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. இப்போது ஜூ செங்/வெர்னன் பார்க் பகுதியில் நான்கு ஸிக்கா தொற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அல்ஜுனிட்டில் நான்கு புதிய ஸிக்கா சம்பவங்களையும் சேர்த்து இப்போது அங்கு இதுவரை 283 சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. சிக்லாப்பில் உள்ள எலிட் டெரஸில் மற்றொரு புதிய சம்பவத்தை அடுத்து அங்குள்ளஸிக்கா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 11க்கு உயர்ந்துள்ளது.

Loading...
Load next