சிரமமான காலத்தில் ஊழியருக்கு உதவி உறுதி

உலகப் பொருளியல் சிரமமான காலகட்டத்தை நோக்கிச் செல் கிறது. அத்துடன், சிங்கப்பூர் நிறு வனங்கள் மறுசீரமைப்பை எதிர் நோக்கும் நிலையில், அதிக ஊழி யர்கள் தங்கள் வேலைகளை இழக்கலாம். இவற்றை எதிர் கொள்ள ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால், ஊழியர்களுக்கு அர சாங்கம் கூடுதல் உதவியை வழங் கிடும் என்று மனிதவள அமைச் சரான லிம் சுவீ சேயும் பிரதமர் அலுவலக அமைச்சரும் தொழிற் சங்க இயக்கத் தலைவருமான சான் சுன் சிங்கும் உறுதி அளித் துள்ளனர். சிங்கப்பூர் ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் பயிற்சித் திட்டங்களில் சேர்ந்தால் நல்ல வேலை கிடைக்க உதவி அளிக்கப்படும் என்று அவர்கள் விளக்கினர்.

இவ்வாண்டின் முதல் பாதி வேலைச் சந்தை நிலவரப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு வேலையிழப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகப் பொருளியல் மெது வடைந்து வருவதாலும் உள்ளூர் பொருளியல் பாதிப்படையும் என் பதாலும் அடுத்த 12 மாதங்கள் சவால்மிக்கதாக இருக்கும் என்றார் திரு சான். தொழில்கள் மாற்றம் கண்டு வரும் வேளையில், வேலையிழப்பு அதிகரிக்கக்கூடும். அதற்கு தமது அமைச்சு தயாராகவே உள்ளது என்றார் அமைச்சர் லிம் சுவீ சே.

Loading...
Load next