தாயாரிடம் பிறந்த நாள் ஆசி பெற்ற பிரதமர்

அக­ம­தா­பாத்: இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தனது பிறந்த­நா­ளான நேற்று குஜ­ராத்­தில் வசித்­து­வ­ரும் தனது தாயார் ஹிரா பென்னை சந்­தித்து அவ­ரது காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்­றார். பிர­த­மர் மோடி தனது ஒவ்­வொரு பிறந்த­நா­ளின்­போ­தும் குஜ­ராத்­தில் தனது சகோ­த­ர­ரு­டன் வசித்­து­வ­ரும் தாயார் ஹிரா பென்னை சந்­தித்து அவ­ரி­டம் நல்­லா­சி­களைப் பெறு­வது வழக்­கம்.

அவ்­வகை­யில், ரய்­சன் பகு­தி­யில் உள்ள தனது சகோ­த­ரர் பங்கஜ் மோடி­யின் வீட்­டுக்கு நேற்று காலையில் சென்ற பிர­த­மர் மோடி, தற்­போது 97 வய­தா­கும் தாயார் ஹிரா பென்­னின் கால்­களில் விழுந்து ஆசி பெற்­றார். அவ­ரி­டம் சுமார் அரை­மணி நேரம் பேசிக்­கொண்­டி­ருந்த மோடி, அங்­கி­ருந்து புறப்­பட்­டுக் குஜ­ராத் மாநில ஆளுநர் மாளிகைக்­குச் சென்றார். அங்­கி­ருந்து தகோட் மாவட்­டத்­துக்­குச் செல்­லும் அவர் பழங்­கு­டி­யின மக்­களுக்­கான பல்­வேறு நலத்­திட்­டங்களை நேற்று துவக்கிவைத்­தார். நேற்­றுப் பிற்­ப­க­லில் நவ்­சாரி பகு­தி­யில் நடை­பெற்ற மாற்­றுத்­தி­றனாளிகளுக்கு நல உத­வி­கள் வழங்­கும் விழா­வில் கலந்துகொண்டு டெல்லி திரும்பினார்.

தனது 97 வயது தாயாரின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெறும் பிரதமர் மோடி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!