பொய் சொல்லி மரினா பே சாண்ட்ஸ் நீச்சல் குளத்திற்கு செல்லும் சுற்றுப்பயணிகள்

சிங்கப்பூருக்கு சிக்கனப்பயணம் மேற்கொள்ளும் சில சுற்றுப்பயணி கள் புதிய “சவாலையும் துணி கரச் செயலையும்” கண்டுபிடித் திருக்கிறார்கள். அந்த அனுப வத்தை அவர்கள் இணையத் திலும் பகிர்ந்துகொள்கின்றனர். இந்தச் சிக்கனப்பயணிகள் மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலுக் குள் திருட்டுத்தனமாக நுழை கின்றனர். ஹோட்டலின் ‘சாண்ட்ஸ் ஸ்கைபார்க்’ நீச்சல் குளத்திற்குச் செல்வதுதான் அவர்களது நோக்கம். ஆனால், அவர்கள் செய்வது சட்டவிரோதமாக இருக்கக்கூடும் என்று வழக்கறிஞர்கள் தி நியூ பேப்பரிடம் கூறினர். ஹோட்டலின் 57வது மாடியில் அமைந்திருக்கும் விளிம்பில்லா நீச்சல் குளம் உலகிலேயே ஆக உயரமானது, ஆகப்பெரியது. ஆனால், ஹோட்டல் கொள்கை யின்படி ஹோட்டலில் தங்கியிருப் பவர்கள் மட்டுமே நீச்சல் குளத் தைப் பயன்படுத்த முடியும்.

ஹோட்டலில் தங்கி இருப்பவர் போலப் பாசாங்கு செய்து நீச்சல் குளத்திற்குச் சென்ற சுற்றுப் பயணி ஒருவருடன் நியூ பேப்பர் நிருபர் பேசினார். துப்புரவுப்பணி வண்டிகளில் கவனிப்பின்றி கிடக்கும் குளியல் அங்கிகளைத் திருடி அணிந்து கொள்ளுதல், நீச்சல் குளத்தின் நுழைவாயிலில் இருக்கும் ஹோட்டல் ஊழியர் களிடம் பொய் சொல்லி ஏமாற்று தல் போன்ற தந்திரங்களைச் சிக் கனப்பயணிகள் கையாளுகின் றனர். பிப்ரவரி மாதம் சிங்கப்பூருக்கு வந்த 24 வயது குமாரி கிம்பர்லி கொனர், தான் சில சட்டங்களை மீறப்போவதை அறிந்திருந்தார். இந்த யோசனை அவரை “கதி கலங்கச் செய்தது” என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

“என் மனத்திரையில் காட்சி கள் தெரிந்தன – சிங்கப்பூர் சிறைக்குச் செல்வது, ஓர் அறை யின் விலையைவிட அதிக அப ராதம் செலுத்துவது, அல்லது வேறு பல மில்லியன் சூழ்நிலை கள். ஆனால் நான் அஞ்சா நெஞ்சம் கொண்டவள். இது போன்ற குறும்புச் செயல்களில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார் அவர். மரினா பே சாண்ட்ஸ் ஹோட் டலில் ஓர் இரவு தங்குவதற்கு $500 முதல் கட்டவேண்டும். இந்த விலை குமாரி கொனருக் குக் கட்டுப்படியாகாததால், ஓர் இரவுக்கு $30 கட்டணம் வசூ லிக்கும் தங்குவிடுதியில் தங்கி னார். ஆனால், விளிம்பில்லா நீச்சல் குளத்தில் எப்படியாவது நீந்திவிடவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். “ஊழியர்களிடம் பொய் சொன்னதற்கு வருத்தமாகத் தான் இருந்தது. ஆனால், வெள்ளை அங்கி அணிந்து நீச்சல் குளத்தருகே இருக்கும் நூற்றுக்கணக்கான ஹோட்டல் விருந்தினர்களுடன் நான் ஒரு வர் சேர்வதால் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் ஏற்படாது என்று நினைத்தேன்,” என்றார் குமாரி கொனர்.

ஆனால் இந்தக் கருத்தை ஹோட்டல் ஏற்கவில்லை. அத்து மீறி நுழைய முயல்வோருக்கு எதிராக “தகுந்த நடவடிக்கைகள் எடுக்க ஹோட்டல் தயங்காது” என்று மரினா பே சாண்ட்ஸ் பேச் சாளர் கூறினார். “இவ்வாறு செய்வோரை போலிசிடம் ஒப்படைத்துப் புகார் கொடுப்பதும், இங்கு வரமுடியா தபடி அவர்களுக்குத் தடை விதிப்பதும் அதில் உள்ளடங் கும். விளிம்பில்லா நீச்சல் குளம் ஹோட்டலில் தங்கியிருப்பவர் களுக்கு மட்டுமே என்றும் நீச்சல் குளம் அவர்களின் சிறப்பு பயன் பாட்டுக்காக மட்டுமானது என் றும் வருகையாளர்கள் அனைவ ருக்கும் நினைவுபடுத்த விரும்பு கிறோம்,” என்றும் அவர் சொன் னார். ஹோட்டலில் தங்கியிருப்பவர் களைப் போல பாசாங்கு செய்து தனியார் சொத்துடைமைக்குள் அனுமதியின்றி நுழையும் சுற்றுப் பயணிகள் பற்பல சட்டங்களை மீறக்கூடும் என்று வழக்கறிஞர் கள் எச்சரித்துள்ளனர்.

மரினா பே சாண்ட்ஸ் ஹோட்ட லின் ‘சாண்ட்ஸ் ஸ்கைபார்க்’ நீச்சல் குளத்தில் குமாரி கிம்பர்லி கொனர்.

Loading...
Load next