அறப்பணியுடன் கூடிய பல இன மெதுநடை ஓட்டம்

சுமார் 600 பேர் கலந்து கொண்ட மெதுநடை ஒட்டத்தை நேற்று காலை 7.45 மணியளவில் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வளாகத்திலி ருந்து தொடங்கி வைத்தார் புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளிதரன் பிள்ளை. மெதுநடை ஓட்டம் ரிவர்வேலி ரோடு, கிளமென்சியூ அவின்யூ, சிங்கப்பூர் ஆற்றங்கரை வழியாகச் சென்று மீண்டும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை வந்தடைந்தது. மெதுநடை ஒட்டத்தை தொழில் நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியைச் சேர்ந்த உடற்கல்வி விரிவுரையாளர் திரு எஸ். ராமசாமி வழிநடத்திச் சென்றார்.. சிறப்பு விருந்தினர் முரளிதரன் தனது உரையில், “பல இன சமுதா யத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வரவேற்கத்தக் கது. ஆலயமும் பல அமைப்புகளுக்குத் தொடர்ந்து நன்கொடை அளித்து வருவது பாராட்டத்தக் கது,” என்று குறிப்பிட்டார்.

பங்கேற்றவர்களுக்கு அன்பளிப்புப் பைகள், டி-சட்டை, அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் கிடைத்தன. இந்தியர்கள் தவிர இதர இனத்தவர்களும் கலந்து கொண்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அமைந்தது. கடந்த சில ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு இயந்திர சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. உதவி தேவைப்படுவோரைத் தேர்ந்தெடுக்க காலாங் சமூக மன் றம், கம்போங் கிளாம் தொகுதி விளையாட்டு மன்றம், ஜாலான் புசார் ‘யங் ஹார்ட்ஸ்’ குழு ஆகி யவை உதவி புரிந்தன.

மெதுநடை ஓட்டத்தைத் தொடங்கிய வைத்த புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளிதரன் பிள்ளை (நடுவில்) அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அறுவருக்கு இயந்திர சக்கர நாற்காலிகளையும் வழங்கினார். படம்: செட்டியார் கோயில் குழுமம்

Loading...
Load next