மாற்றங்கள் தனிநபர்களைக்குறிவைக்கவில்லை

தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறையில் செய்யப்படும் மாற்றங்கள் தனிமனிதர்கள் எவரையும் குறிவைக்கவில்லை என்றும், ஒட்டுமொத்த மறுஆய்வு அவசியமா என்பதை ஆராய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது என் றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று கூறினார். தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறை குறித்து அரசமைப்புச்சட்ட ஆணைக்குழு ஒரு மாதத்திற்கு முன் செய்த பரிந்துரைகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் முன்னதாக இவ்வாரம் கொள்கையளவில் ஏற் றுக்கொண்டது.

ஏற்கப்பட்ட மாற்றங்கள் மசோ தாவாகத் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படும். மசோதா நிறைவேற்றப்பட் டால் சட்டமாக்கப்படும். தொழில்நுட்பக் கல்விக்கழக மத்திய கல்லூரியில் நேற்று பிற் பகல் நடைபெற்ற கலந்துரையாட லில் சுமார் 1,300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் 2011ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டி யிட்ட டாக்டர் டான் செங் பாக் போன்ற உத்தேச வேட்பாளர் களைத் தடுப்பதற்காக தேர்ந்தெடுக் கப்படும் அதிபர் முறையில் மாற்றங்கள் செய்யப்படுகிறதா எனப் பார்வையாளர் ஒருவர் திரு சண் முகத்திடம் கேட்டார்.

“செயல்முறையே இதன் தொடக்கப்பள்ளி. எதிர்காலத்திற் காக, சிங்கப்பூரின், நமது பிள்ளை களின், பேரப்பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக நாங்கள் இதைச் செய்கிறோம். தனி மனிதர்களைப் பார்த்துப் பின்னோக்கிச் செயல்பட வில்லை. செயல்முறை பற்றிய பொருத்தமான கேள்விகளுடன் தொடங்கி, அதன் பிறகு நியாய மான முறையில் செயல்படுத்த வேண்டும்,” என்றார் அமைச்சர். அரசாங்கத்திடம் மறுப்புக் கூறும் அதிகாரம் அதிபருக்கு இருக்கவேண்டுமா, வாக்கெடுப் பின்மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப் படவேண்டுமா, வேட்பாளராகத் தகுதி பெறுவதற்கான விதிமுறை கள் மறுஆய்வு செய்யப்படவேண் டுமா ஆகிய கேள்விகளும் இதில் உள்ளடங்கும் என்றார் திரு சண் முகம்.

Loading...
Load next