ஸிக்கா: புதிய உத்தேச தொற்றுப்பகுதி

இம்மாதம் 17ஆம் தேதி முதல் நேற்று வரை சிங்கப்பூரில் 12 புதிய ஸிக்கா கிருமித் தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து இதுவரை ஸிக்கா கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 381 என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஹவ்காங் அவென்யூ 7 பகுதியில் இரண்டு புதிய ஸிக்கா சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது புதிய உத்தேச கிருமித் தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே ஸிக்கா கிருமித் தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் அல்ஜுனிட்டில் மூன்று புதிய சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன.

அந்தப் பகுதியில் மட்டும் நிகழ்ந்த ஸிக்கா சம்பவங்களின் எண்ணிக்கை 286. சிக்லாப்பில் உள்ள இலிட் டெரஸ் பகுதியில் மேலும் இரு சம்பவங்கள். இதையும் சேர்த்து அங்கு இதுவரை 13 சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது சிங்கப்பூரில் ஒன்பது ஸிக்கா கிருமித் தொற்றுப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தேசிய சுற்றுப்புற வாரி-யத்தின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.

Loading...
Load next