இணையத் தில்லுமுல்லுகள் 13.4% கூடின

சிங்கப்பூரில் 2016 முதல் பாதியில் இணையத் தில்லுமுல்லுகள் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அதிகரித்துவிட்டன என்று போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது. செல்பேசிகளுக்குப் பணம் அனுப்புவது, உள்ளூர் இசை நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சி இடங் களுக்கும் செல்ல நுழைவுச்சீட்டு களுக்குப் பணம் செலுத்துவது முதலான காரியங்களைச் செய்து பலரும் ஏமாந்து இருக்கிறார்கள். இணைய வர்த்தகம் தொடர்பில் மொத்தம் 1,145 ஏமாற்று விவ காரங்கள் பற்றி இந்த ஆண்டு முதற்பாதியில் தெரிவிக்கப்பட் டிருக்கின்றன என்று போலிஸ் கூறியுள்ளது.

இது 2015 முதற்பாதியுடன் ஒப் பிடுகையில் 13.4% அதிகம் என் பது குறிப்பிடத்தக்கது. 10 புகார்களில் ஏறக்குறைய ஏழு புகார்கள் Carousell, Gumtree, ஃபேஸ்புக் போன்ற இணையச் சந்தைத் தளங்களைப் பயன்படுத்தி பலரும் ஏமாந்தது தொடர்பானவை என்று போலிஸ் அறிக்கை தெரிவித்தது. பெரும்பாலான விவகாரங்களில் ஏமாற்றுப்பேர்வழிகள் இணைய விற்பனையாளர்கள் போல் நடித்து, முன்பணம் செலுத்துமாறு கேட்டு பலரையும் ஏமாற்றிவிட்டார்கள். உள்ளூர் வங்கிக் கணக்கு ஒன்றிற்குப் பணத்தை மாற்றிவிட் டால் வீட்டிற்கு பொருள் வந்து சேரும் என்று சொல்லி அவர்கள் பலரையும் இணங்கச் செய்திருக் கிறார்கள். அந்தப் பேர்வழிகள் சொன்னதைக் கேட்டு பணத்தை மாற்றிவிட்ட பலரும் பிறகு அந்தப் பேர்வழிகளுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்துப்போய்விட்ட னர். ஏமாற்றுப்பேர்வழிகள் போலி யான நுழைவுச்சீட்டுகளைக் கொடுத்தும் சிலரை ஏமாற்றியிருக் கிறார்கள்.

Loading...
Load next