காதுகேளா மாணவர்களுக்கு அதிக ஆதரவு தர ஏற்பாடு

செவிப்புலன் குறைபாடுள்ள மாண வர்களுக்கு குறிப்பிட்ட பள்ளிக் கூடங்கள் மேலும் ஆதரவு அளிக் கும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. குறிப்பிட்ட ஒரு தொடக்கப் பள்ளியும் ஓர் உயர்நிலைப்பள்ளி யும் செவிப்புலன் குறைபாடுள்ள மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் இதர மாணவர்களுடன் சேர்ந்து படிக்க, சேர்ந்து விளையாட அனுமதிக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலஸ்டியர் ஹில் உயர்நிலைப் பள்ளி, பூன் லே உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்குப் பதிலாக பீட்டி உயர்நிலைப்பள்ளி அடுத்த ஆண்டு முதல் உயர்நிலை முதல் வகுப்பில் இத்தகைய குறைபாடு உள்ள மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும். பாலஸ்டியர், பூன் லே பள்ளிகளில் சைகை மொழியைப் பயன்படுத்தும் செவிப்புலன் குறை பாடுடன்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவு. இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக் கிறது. இவர்களை ஒரே உயர் நிலைப்பள்ளியில் படிக்க வைத்தால் பாட்டுப்பாடுவது, சமூகக் கலந்துற வாடல்கள், சக மாணவர்களின் ஆதரவு ஆகியவற்றின் வழியாக பரஸ்பர தகவல் தொடர்புக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். சமூக உணர்வும் அதிகமாக இருக் கும். ஒரே இடத்தில் வளங்களைத் திரட்டி பலப்படுத்தவும் வசதி இருக்கும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மெக்பர்சன் தொடக்கப்பள்ளியில் செவிப்புலன் குறைபாடுள்ள பத்து வயது மாணவர் நிகால் முகம்மது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

 

Amirul Afiq Rozlan, a Secondary 2 student at Balestier Hill Secondary who was diagnosed with hearing loss in 2005, at a science remedial class taught by Madam Nafisah Mohd Amin, 49. She communicates with the 15-year-old using sign language.PHOTO: TIFFANY GOH FOR THE STRAITS TIMES

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ