திருடப்பட்ட சைக்கிள்களை வாங்கியவருக்குச் சிறை

திருடப்பட்ட சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட குற்றத்துக்காகப் பழைய பொருட்கள் வாங்குபவர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். கடந்த மாதம் மேல்முறையீட்டுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து 68 வயது டான் சூன் ஹுயிவுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எஞ்சியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக டான் நேற்று நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டார். தமது நண்பரான 55 வயது செங் நியூக் சோனுடன் சேர்ந்து திருடப்பட்ட சைக்கிள்களைப் பெற்றக்கெண்டதை அவர் ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட சைக்கிள்களை டான் வாங்கிய பிறகு அவற்றைச் செங் விற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் இருவரும் 100க்கும் அதிகமான திருடப்பட்ட சைக்கிள்களை வாங்கி விற்றுள்ளனர். ஒவ்வொரு குற்றச்சாட்டின்கீழ் டானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!