சுடச் சுடச் செய்திகள்

தீபாவளி சந்தையை முன்னிட்டு போக்குவரத்து ஏற்பாடுகள்

தீபாவளி சந்தை வரும் சனிக்கிழமை முதல் நவம்பர் 1ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை ஹேஸ்டிங்ஸ் சாலையில் நடைபெறும். இதன் காரணமாக ஹேஸ்டிங்ஸ் சாலை இன்று காலை 10 மணி முதல் நவம்பர் மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் போலிஸ், அவசரச்சேவை வாகனங்களுக்கும் மட்டும் இந்தச் சாலையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹேஸ்டிங்ஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. விதியை மீறி அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும். மேல் விவரங்களுக்கு பொதுமக்கள் 6392 2246 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon