மலேசிய குடிநுழைவு அதிகாரியைத் தாக்கிய சிங்கப்பூரருக்கு சிறை

தனது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) வெற்றுப் பக்கத்தில் குடிநுழைவுச் முத்திரை குத்தப்படவில்லை எனும் காரணத்துக்காக மலேசிய குடி நுழைவு அதிகாரியைத் தாக்கிய சிங்கப்பூருக்கு மலேசிய மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயது தாதி திரு முகம்மது ருஸாய்னி ஜொஹாரி, மலேசியாவின் ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் இம்மாதம் 2ஆம் தேதி இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தி ஸ்டார் மலேசியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஜொகாரிக்கு $2,300 (7,000 ரிங்கிட்) அபராதமும் விதிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஜொஹாரி ஒப்புக் கொண்டார். அபராதத்தைக் கட்டிவிட்ட ஜொஹாரியின் இரு வாரச் சிறை தண்டனை அவர் கைதான செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படவேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி ஆணையிட்டார்.

Loading...
Load next