‘என்யுஎஸ்’ வளாகத்தில் செல்லும் துணை பேருந்துகளில் இணைய வசதி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக வளாகத்தை சுற்றி வரும் எல்லா துணை பேருந்துகளில் இனி ‘வைஃபய்’ இணையச் சேவையை மாணவர்களும் பணியாளர்களும் பயன்படுத்தலாம் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. வாகனங்களுக்கு இடையே நிலவும் கம்பியில்லா இணைய இணைப்பு (mesh platform) எனும் புதிய இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் முதல் முறையாக இந்தச் சேவை அறிமுகம் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் சேவை மூலமாக வளாகத்தை இயக்கும் முறை, சேவைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் எந்த இடத்தில் பேருந்து நிற்கிறது, எத்தனை பேர் பேருந்தில் ஏறுகிறார்கள் போன்ற தகவல் களை உடனுக்குடன் அளிக்க முடியும். இதனால் தேவைகேற்ப பேருந்துகளை வரிசைப்படுத்தி அனுப்ப இது ஏதுவாக இருக்கும். ஸ்டார்ஹப், கம்ஃபர்ட் டெல்குரோ பேருந்து, ‘வினாம்’ ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தச் சேவை அறிமுகம் கண்டிருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது