தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடவடிக்கை

முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான முகாம்களில் முறையற்ற நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ததற்காகச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குறைந்தது 14 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை முதற்கொண்டு கட்டாய சமூக சேவை உட்பட்ட தண்டனைகள் கொடுக்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவித்ததாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டது. கலைகள், சமூக அறிவியல் பள்ளி, மாணவர் சங்கம் உட்பட்ட அமைப்புகளுக்காக அந்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர் அறிமுக முகாம்களை ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது என்றும் இந்த முடிவை எதிர்த்து மாணவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

இது குறித்து கருத்துகள் கேட்க சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அணுகியுள்ளது. அப்போது 'விசாரணை நியாயமான ஒன்றாக இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப் பட்டவர்களின் தனிப்பட்ட உரிமைகளைக் கட்டிக் காக்கவும் மாணவர் ஒழுங்கு நடவடிக்கைகள் பல்கலைக் கழகத்துக்குள்ளேயே செய்யப்படும் ஒன்று,' என்று பல்கலைக்கழக பேச்சாளர் கூறியதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறிமுக முகாமில் குறிப்பாக பெண்ணை மானபங்கம் செய்வதைச் சித்திரிக்கும் நடவடிக்கை உட்பட பல முறையற்ற நடவடிக்கைகள் நடப்பதாக தி நியூ பேப்பர் நாளிதழ் கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியிட்டது. பல ஆண்டுகளாக மாணவர்கள் புகார் கொடுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வந்துள்ளன என்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அறிமுக முகாம் மறுபரிசீலனை

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம், அதன் முதலாம் ஆண்டு மாணவர்க ளுக்கான அறிமுக முகாமில் நடைபெறும் நடவடிக்கை களை மறுபரிசீலனை செய்யக் குழு ஒன்றை அமைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முகாமில் தகாத நடவடிக்கைகள் குறித்துப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அறிமுக முகாம் ரத்து செய்யப்பட்டது.

தேசிய பல்கலைக் கழகத்தின் முதலாம் ஆண்டு அறிமுக முகாமின்போது மாணவி ஒருவரை தண்ணீருக்குள் அழுத்தி வெளியில் தூக்கும் மாணவர் அறிமுக முகாம் ஏற்பாட்டாளர்கள். ஸ்டோம்ப் இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் இது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!