பணத்தைத் தவறாகக் கையாண்ட நிர்வாகிக்கு சிறை

மசெக சமூக அற­நி­று­வ­னத்­தின் கிளை ஒன்­றின் முன்னாள் நிர்­வாகி, சுமார் இரண்டு ஆண்டு கால­மாக அற­நி­று­வ­னத்­தின் $25,912 பணத்தைத் தவ­றா­கக் கையாண்ட­தற்­காக நேற்று நீதி­மன்றம் நான்கு மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. பிசி­எ­ஃப் தாம்­சன் - தோ பாயோ கிளை­யில் பணி­பு­ரிந்த­போது இமெல்டா வேணி அந்­தோணி என்ற 33 வயது பெண், 2012 முதல் 2014ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தக் குற்­றத்தைப் புரிந்­துள்­ளார். இப்­போது மேக்­ட­லின்’ஸ் கின்­டர்­கார்­டன் என்­னும் பாலர் பள்­ளி­யின் முதல்­வ­ரா­க இவர் பணி­யாற்­று­கிறார். 1.4.2012 முதல் 31.12.2012 வரை அற­நி­று­வ­னத்­திற்­குச் சொந்த­மான பணத்தைத் தவ­றா­கக் கையாண் டதை அவர் நீதி­மன்றத்­தில் ஒப்­புக்­கொண்டார்.

$11,406, $3,177 ஆகிய தொகை­கள் தொடர்­பான இது­போன்ற மேலும் இரு குற்­றங்களும் தண்டனை அளிக்­கும்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன. அற­நி­று­வ­னத்­தின் பணத்தை தனது பட்­டப்­ப­டிப்­புக்­கா­க­வும் கடன் அட்டை பட்டுவாடா, தின­சரி செலவு போன்ற­வற்­றுக்­கா­க­வும் அவர் பயன்­படுத்­தி­யி­ருக்­கிறார். தான் தவ­றா­கக் கையாண்ட $25,912 பணத்தை அவர் இப்­போது திருப்­பிக் கொடுத்­துள்­ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை