சைக்கிளோட்டப் பாதை மேம்படுகிறது

டெம்ப­­­னிஸ், பாசிர் ரிஸ், யீ‌ஷுன், செம்ப­­­வாங், தாமான் ஜூரோங் ஆகிய ஐந்து பேட்டை­­­களில் சைக்­­­கிள் புழக்­­­கத்தை எளி­­­தாக்­­­கும் வகை­­­யில் அதற்­­­கான பாதைக் கட்­­­டமைப்பை வச­­­தி­­­களு­­­டன் கூடிய புதிய முறை­­­யில் உரு­­­வாக்­­­கு­­­வ­­­தற்கு நிலப் போக்­­­கு­­­வ­­­ரத்து வாரி­­­யம் குத்­­­தகை­­­யா­­­ளர்­­­களுக்கு அழைப்பு விடுத்­­­துள்­­­ளது. சைக்­­­கிள் நிறுத்­­­தம், போக்­­­கு­­­வ­­­ரத்­­­துச் சந்­­­திப்­­­பு­­­களில் சைக்­­­கிள்­­­கள் எளி­­­தாக சாலையைக் கடப்­­­ப­­­தற்­­­கான வச­­­தி­­­கள், சைக்­­­கி­­­ளோட்­­­டி­­­களுக்­­­கான ஒரு­­­மு­­­கப்­­­படுத்­­­தப்­­­பட்ட அறி­­­விப்பு வாச­­­கங்கள் உள்­­­ளிட்­­­டவை இந்த புதிய கட்­­­டமைப்­­­பில் அடங்­­­கும். அக்­­­கம்பக்­­­கப் பேட்டை­­­களுக்கு மக்கள் எளி­­­தில் சென்­­­று­­­வ­­­ரக்­­­கூ­­­டிய வச­­­தியைப் பெறு­­­வ­­­தன்­­­மூ­­­லம் குடி­­­யி­­­ருப்­­­புப் பேட்டை­­­களுக்கு இடை­­­யே­­­யான இணைப்பை மேம்படுத்த இந்தக் கட்­­­டமைப்பு உத­­­வும்.

இந்த ஆண்டு இறு­­­திக்­­­குள் கிள­­­மெண்டி, ஹவ்­­­காங், மார்­­­சி­­­லிங், பிரோ­­­மி­­­னாட், செங்காங் ஆகிய பேட்டை­­­களி­­­லும் சைக்­­­கி­­­ளோட்­­­டப் பாதை­­­கள் பூங்காக்­­­களு­­­டன் இணைக்­­­கப்­­­படும். பீஷான், புவாங்காக், டகோட்டா, டோவர், பொத்­­­தோங் பாசிர், உட்­­­லண்ட்ஸ், இயூ டீ ஆகிய இடங்களில் ஏற்­­­கெ­­­னவே சைக்­­­கி­­­ளோட்­­­டி­­­களுக்­­­கென தனிப்­­­பாதை­­­யும் பாத­­­சா­­­ரி­­­களுக்­­­கென தனிப்­­­பாதை­­­யும் அமைக்­­­கப் ­­­பட்­­­டுள்­­­ளன. தாமான் ஜூரோங்­­­கில் இப்­­­போது 5.4 கிலோ மீட்டர் தூரம் அமைக்­­­கப்­­­பட்­­­டுள்ள சைக்­­­கி­­­ளோட்­­­டப் பாதை 10 கிலோ மீட்டர் தூரத்­­­திற்கு நீட்­­­டிக்­­­கப்­­­ப­­­ட­­­வுள்­­­ளது. இதற்­­­கான பணி 2017ஆம் ஆண்டு தொடக்­­­கத்­­­தில் ஆரம்­­­பிக்­­­கப்­­­பட்டு 2020ல் நிறை­­­வு­­­பெ­­­றும் என்று வாரி­­­யம் தெரி­­­வித்­­­தது. இந்த நீட்­­­டிப்­­­பின் வழி தாமான் ஜூரோங் குடி­­­யி­­­ருப்­­­பா­­­ளர்­­­கள் அரு­­­கே­­­யுள்ள லேக்சைட் எம்­­­ஆர்டி நிலை­­­யம், ஜூரோங் லேக் பகு­­­தி­­­களுக்கு எளி­­­தாக சைக்­­­கி­­­ளில் சென்று வர­­­லாம். அதி­­­க­­­மா­­­னோர் சைக்­­­கிளைப் பயன்­­­படுத்­­­தும் வகை­­­யில் இந்தத் தொகு­­­தி­­­யில் சைக்­­­கிள் பகிர்­­­வுத் திட்டம் ஒன்றை­­­யும் அடுத்த ஆண்டு இறு­­­தி­­­வாக்­­­கில் வாரி­­­யம் அறி­­­மு­­­கப்­­­படுத்­­­த­­­வி­­­ருக்­­­கிறது.

Loading...
Load next