ஹோட்டல் ஊழியர்களுக்கு புதிய பயிற்சித் திட்டங்கள்

ஊழி­யர் பற்­றாக்­குறையை எதிர்­நோக்­கும் ஹோட்டல் துறை பணி­களுக்கு ஊழி­யர்­களை ஈர்க்­கும் வகை­யில் இரண்டு புதிய திட்­டங்கள் தொடங்கப்­பட்­டுள்­ளன. அவற்­றுள் புதிய திறன் கட்­டமைப்­புப் பணி பயிற்சி மூலம் ஊழி­யர்­களுக்­குத் தேவை­யான பயிற்­சியை வழங்­கு­வ­தும் அடங்­கும். மனி­த­வள அமைச்­சர் லிம் சுவீ சே நேற்று சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நடந்த ஹோட்டல் துறைக்கான வேலைக் கண்­காட்சி ஒன்­றில் இந்த இரண்டு புதிய திட்­டங்களைத் தொடங்கி வைத்­துப் பேசினார். “எதிர்­கா­லத்­தில் நமது ஹோட்­டல்­கள் விருந்­தி­னர்­களுக்கு மட்­டும் புதிய, சிறந்த சேவை­களை அளிப்­ப­தாக இருக்­கமாட்டா. அங்கு பணி­பு­ரி­யும் ஊழி­யர்­களுக்­கும் சிறந்த வேலை வாய்ப்­பு­களை வழங்கக்­கூ­டி­ய­தா­க­வும் இருக்­கும்,” என்றார் அமைச்­சர் லிம்.

சேவைத் துறை­யில் ஊழி­யர் சந்தை பற்­றிய மோச­மான நில­வ­ரம் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்­பட்­டது. அதனை­ய­டுத்து மனி­த­வள அமைச்­ச­ரின் இந்த அறி­விப்பு இடம்­பெற்­றுள்­ளது. 35,000 பேர் பணி­யாற்றி வரும் ஹோட்டல் துறை­யில் 2,100 வேலை­கள் காலி­யாக உள்­ளன. அவற்­றில் 40 விழுக்­காட்டு வேலை­கள் மேலா­ளர்­கள், திறனா­ளர்­கள், உயர் அதி­கா­ரி­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ருக்­கா­னவை. தேசிய அள­வில் தொடங்கப்­பட்ட ஸ்கில்ஸ்­ஃ­ப்யூச்­சர் திட்­டத்­ தின் அடிப்­படை­யில் முதன்­மு­த­லில் ஹோட்டல், தங்­கும் விடு­திச் சேவை ஆகிய துறை­களில் பணி­பு­ரி­வோ­ருக்­காக திறன் கட்­டமைப் புப் பணி பயிற்சி வழங்கப்­பட்­டது. ஊழி­யர்­கள் தாங்கள் விரும்­பும் வேலையைப் பெறு­வ­தற்­கான குறிப்­பிட்ட திறனைப் பெறு­வது, செய்­யும் வேலை­யில் முன்­னேற்­றம் காண்­பது போன்ற­வற்­றுக்கு உத­வும் வகை­யில் இந்த வழி­காட்­டித் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நேற்று நடந்த ‘ஹோட்டல் தினம் 2016’ல் கலந்து கொண்டார் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே. ஹோட்டல் நிர்வாகக் கல்வியில் பட்டயக் கல்வி பயிலும் மாணவர் சோ ஷாங் நெங் அமைச்சருக்கு பரிமாறுகிறார். படம்: எஸ்பிஎச்

Loading...
Load next