அண்டை வீட்டார்களின் சச்சரவுகளில் 70% இரைச்சல் தொடர்பானது

அரசு நீதிமன்றங்களின் அண்டை வீட்டார் பிரச்சினைகள் போன்ற வற்றுக்கான சமரச மன்றங்கள் அமைக்கப்பட்ட முதல் 10 மாத காலத்தில் அண்டை வீட்டார் பிரச்சினைகள் தொடர்பான 79 வழக்குகள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சமூக பிரச்சினைகளுக்கான சமரச மன்றத்துக்கு வந்த இந்த 79 வழக்குகளில் 70 விழுக்காடு அதிக இரைச்சல் தொடர்பானவை. 25 விழுக்காடு வழக்குகள் குப்பை போட்டது, அசையும் பொருட்கள் தொடர்பானவை என்று அரசு நீதி மன்றங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வழக்கிலும் ஒன்றுக்கும் மேலான காரணங்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டது.

வீவக வீட்டுக்கு நேர் கீழே குடியிருப்பவர் கராவோக்கே கருவியைப் பயன்படுத்தும்போது வீட்டுக் கதவுகளையும் சன்னல் களையும் திறந்து வைத்திருக்கிறார் என்று ஒரு மாது புகார் கொடுத் திருந்தார். மற்றொரு புகாரில் பொது தாழ்வாரத்தில் தமது வீட்டுக்கு முன்பு சைக்கிள், காலனி வைக்கும் அடுக்கு, ஊதுவத்தி கொளுத்தும் கூடு போன்ற பொருட்களை பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருக்கிறார் என ஒருவர் குற்றம் சாட்டியிருந் தார். இதே காலகட்டத்தில் 930க்கும் அதிகமான விசாரணைகள் நடை பெற்றன என்றாலும் அனைத்துமே சென்ற ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட சமரச மன்றத்தின் விசாரணைக்கு கொண்டுவரப்பட வில்லை. “சமூக சமரச நிலையம், அரசு நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் எங்கு விசாரணை நடத்தப்பட்டாலும் அண்டை வீட்டாரின் பிரச்சினையில் சமரசம் காண்பதே முக்கியம்,” என்று அரசு நீதிமன்றங்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது