கனடாவில் சிங்கப்பூர் மாணவர் காயம்

தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்ததால் சிங்கப்பூர் மாணவரைக் காவல் துறையினரின் நாய் கடித்துக் காதை கிழித்து விட்டது. கனடாவில் படித்துவரும் 26 வயது விக்னேஷ் சுப்பிரமணியம் தமக்கு ஒன்றும் தெரியாது என்று பலமுறை அலறி கூச்சலிட்டார். ஆனால் அவரது அலறல் யார் காதிலும் விழவில்லை. கனடாவின் பிரிட்டிஷ் கொலம் பியா நகரில் உள்ள நியூ வெஸ்ட் மின்ஸ்டெரில் திங்கட்கிழமை பிற்பகல் (சிங்கப்பூர் நேரப்படி செவ் வாய்க்கிழமை காலை) காரைத் துரத்தி பல சந்தேக நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தபோது விக் னேஷ் பிரச்சினையில் சிக்கினார். கடந்த சனிக்கிழமை ஈஸ்ட் வான்கூவரில் உள்ள வீட்டில் ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்ட சம்பவம் தொடர் பில் காவல்துறையினர் அத்தகைய அதிரடி நடவடிக்கையில் இறங்கி யிருந்தனர்.

அப்போது எச்சரிக்கை ஒலியை எழுப்பிக் கொண்டே ஒரு வெள்ளை நிறக் காரை மடக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்த விக்னேஷ் கார் மீது வெள்ளை நிறக் கார் மோதியது. இதனால் காரிலிருந்து இறங் கிய விக்னேஷ் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குள் நாய் கடித்துவிட்டது. “வெள்ளை நிற அகுரா காரிலிருந்து புகை வெளியே கிளம் பியதைப் பார்த்தேன். உடனே காரில் இருப்பது நல்லதல்ல என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. காரிலிருந்து இறங்கியதும் சிலர் கத்துவதைக் கேட்டேன். பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்த இருக் கைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அதன் பிறகு நாய் கடித்தது மட்டுமே எனக்குத் தெரியும்,” என்று கனடாவின் குளோபல் நியூசுக்கு அளித்த பேட்டியில் விக்னேஷ் கூறியிருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ