‘இந்திய சமூகம் முன்னேற அனைவரது பங்களிப்பும் தேவை’

வில்சன் சைலஸ்

உயர்­நிலைக்­குப் பிந்திய கல்­விக்குத் தகுதி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேநேரத்தில் சிறந்து விளங்காத மாண­வர்­களை­யும் நினைவில் கொள்வது முக்­கி­யம் என்று சிண்டாவின் தலைவர் குமாரி இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். குடும்ப, சமூகச் சூழல் போன்ற கார­ணங்களுக்காக எவருக்கும் கல்வி கிடைக்­கா­மல் போய் விடக் கூடாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க சிண்டாவின் உதவி இருக்கிறது என்றபோதும் இந்திய சமூ­கத்­தின் முன்­னேற்­றத்­திற்கு ஒட்டு மொத்த சமூ­க­மும் செயல்­பட்டு ஒரு­வ­ருக்கு ஒருவர் ஆத­ர­வாக இருக்­க­வேண்­டும் என்றார் அவர். சிண்டா­வின் உன்னத விருது வழங்­கும் நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய சட்ட, நிதி அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்­சருமான இந்­தி­ராணி ராஜா, கூடு­த­லான இந்திய மாண­வர்­கள் கல்­வி­யில் சிறந்து விளங்க இதுபோன்ற விரு­து­கள் ஊக்­கு­விக்­கும் என்று கூறினார்.

2000ஆம் ஆண்டு உயர்­நிலைக்­குப் பிந்திய கல்வியை 74.9% இந்திய மாண­வர்­கள் மேற்­கொண்ட­னர். 2014இல் இந்த எண்­ணிக்கை 94.6% ஆக உயர்ந்துள்ளது. உன்னத விரு­து பெற்ற மாண­வர்­களின் எண்­ணிக்கை இவ்­ வாண்டு ஆக அதிகம் என்ற அவர், கூடு­த­லான மாண­வர்­கள் உயர்­நிலைக்­குப் பிந்திய கல்வியை மேற்­கொள்­வதை இது குறிக்­கிறது என்றார். தொடக்­க­நிலை மாணவர் முதல் பல்­கலைக்­க­ழ­க மாணவர் வரை மொத்தம் 466 பேர் இவ்­வாண்டு சிண்டா உன்னத விருதுகளைப் பெற்­றனர்.

சிறப்பு விருந்தினராக வருகையளித்த பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து தேசியப் பல்கலைக்கழக சட்டத் துறை பட்டதாரியான ஹைரூல் ஹக்கீம் சிண்டாவின் உன்னத விருதைப் பெறுகிறார். தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரியும் ஹக்கீம் மூன்றாவது முறையாக சிண்டா உன்னத விருது பெறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!