நாள்பட்ட நோய்களுடைய முதியோருக்கு உதவும் புதிய திட்டம்

சுதாஸகி ராமன்

எலும்புத் தேய்வு நோய், இதய நோய், மூட்டுவாதம் போன்ற நோய்களால் அவதியுறும் 55 வயதுடைய திருவாட்டி தெரெசா ஆண்டனிக்கு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பலவிதமான நோய்களால் சோர்வடைந்து மெலிந்த உடல் கட்டோடு காணப்படும் அவருக்கு கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் அபாயம் உண்டு என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல அவர் சக்கர நாற்காலியை நம்பியிருக்கிறார். திருவாட்டி தெரெசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, நேரம் தவறாமல் ஊசி மூலம் மருந்துகளை செலுத்து வது போன்றவற்றைச் செய்து அவரைக் கவனித்து வருகிறார் அவரது இளைய மகள் ஹேமா பெட்ரிஷா, 28.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தமது கல்விப் பயணத்தை முடித்துவிட்டு தற்போது விரைவு உணவகம் ஒன்றில் பணிபுரிகிறார். அவர் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி வேலைக்குச் செல்வதில்லை. இதனால் சில சமயங்களில் பெட்ரிஷா உடனடியாக வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு தாயாருக்குப் பராமரிப்பு உதவிகளை அளிக்க முடியாமல் போய்விடும். இருப்பினும், விடாமுயற்சியுடன் நோய்களைச் சமாளித்து அவற் றிலிருந்து மீண்டு வருவேன் என்ற மனத்திடத்துடன் தாம் இன்று செயல்படுவதற்கு, தெமாசெக் அறநிறுவனத் திட்டத்தின் (Temasek Foundation Cares - Care Close to Home) ஆதரவே காரணம் என்கிறார் திருவாட்டி தெரெசா. புதிதாகத் தொடங்கப் பட்டிருக்கும் இத்திட்டத்தின் கீழ் அங் மோ கியோ, கிரேத்தா ஆயர் பகுதிகளில் வசிக்கும் நாள்பட்ட நோய்களுடைய முதியோருக்குப் பராமரிப்பு ஒருங்கிணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஆசிய மகளிர் சமூக நலச் சங்கத்தின் அங் மோ கியோ முதியோர் நடவடிக்கை நிலையத்துக்கு வெளியே திருவாட்டி தெரெசா, மகள் பெட்ரிஷா ஆகியோருடன் அந்நிலையத்தின் அதிகாரிகள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!