ஊடக விளம்பரங்கள் பற்றி ஆலோசனைக் குழு

பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் விளம் பரங்கள் படைக்கப்படும் முறையில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று ஊடக மேம்பாட்டு ஆணை யத்தின் பொது ஆலோசனைக் குழுக்களின் அண்மை அறிக்கை பரிந்துரைக்கிறது. ஒரு நிகழ்ச்சியின் முடிவில் தயாரிப்புக் குழுவின் பெயர்கள் காட்டப்படுவதற்கு முன்பாக நிகழ்ச் சிக்கு ஆதரவளித்த நிறுவனத் தின் தயாரிப்புகள் விளம்பரப்படுத் தப்பட்டால், அது விளம்பரம் என் பது பார்வையாளர்களுக்குத் தெளி வாகத் தெரியவேண்டும். இல்லாவிடில், நிகழ்ச்சியின் நடி கர்களும் காட்சியமைப்பும் இடம் பெறும் இதுபோன்ற உள் விளம்பரம் என்ற தவறான கண்ணோட் டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கை குறிப்பிட்டது. 'ஒலி 96.8' தமிழ், 'வர்ணா' மலாய் வானொ லிகளைக் கேட்கும் ஓய்வுபெற்றவர் களையும் இல்லத்தரசிகளையும் குறிவைக்கும் ஆரோக்கியப் பொருட் களுக்கான வானொலி விளம்பரங் களையும் அறிக்கை சுட்டியது.

ஆரோக்கிய, அழகுப் பொருட் களின் நன்மைகளைப் பறைசாற்றிய நற்சான்றுகளைப் பயன்படுத்திய இந்த நீளமான விளம்பரங்களைக் கேட்பவர்கள் நிபுணத்துவ மருத் துவ ஆலோசனை நாடாமல் இருக் கக்கூடிய நிலை ஏற்படலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியது. வானொலியில் பாலுறவு சம்பந் தப்பட்ட பேச்சு, மொழி ஆகியவை ஆங்கில நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிந்தன. ஒன் எஃப்எம் 91.3 வானொலி நிலையத்தின் ‚முறையற்ற, ஒளிவு மறைவற்ற, பாலுறவு சார்ந்த விளம் பரத்திற்காகச் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு அப ராதம் விதிக்கப்பட்டது. ‚"நீ எனக்குப் போதுமான பானங்கள் வாங்கிக் கொடுத்தால், என் அடிப் பகுதியை நான் உன்னிடம் காட்டக் கூடும்," என்று பெண் கதாபாத்திரம் பேசிய வரிகள் ஒலிபரப்பு வழிகாட்டி விதிகளை மீறியதாக அறிக்கை குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!