யுனிசிம் சட்டப்பள்ளியில் சேர அதிகமானோர் விண்ணப்பம்

சிங்கப்பூரின் மூன்றாவது சட்டப் பள்ளியான யுனிசிம் பல்கலைக் கழகத்தின் இரண்டு புதிய சட்டத்துறைகளில் பயில 400க்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குற்றவியல் சட்டத்திலும், குடும்பச் சட்டத்திலும் பாடங்கள் நடத்தப்படும். சிங்கப்பூர் சட்டத்துறையில் நிலவும் இடைவெளியை அதன் புதிய இரண்டு பாடங்கள் நிரப்பும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக யுனிசிம் தெரிவித்தது. புதிதாகச் சேர விண்ணப்பம் செய்துள்ளவர்களில் பெரும் பாலேர், பத்தாண்டுக்கும் மேலான வேலை அனுபவம் பெற்ற வர்கள். அவர்களில் சிலர், சட்டப் பணிகளில் அனுபவம் பெற்றவர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், சமூக ஊழியர்கள் ஆகியோர் என்று யுனிசிம் தெரிவித்தது. 27 மாணவர்கள் இளங்கலைப் பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ‘ஜுரிஸ் டாக்டர்’ பாடத்திட்டதில் 33 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். விண்ணப்பம் செய்த அனைவரும் நேர்முகத் தேர்வில் பங்கெடுத்தனர். நால்வர் அடங்கிய நேர்முகத் தேர்வுக் குழுவில் மூத்த வழக்கறிஞர்கள், சட்டத்துறையில் அனுபவம் பெற்ற சமூகத் தலைவர்கள் ஆகியோர் இருந்தனர் என்று யுனிசிம் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை