பிரதமர் லீக்கு ஜப்பானிய மன்னர் இன்று பகல் விருந்து

ஜப்பானியப் பேரரசர் அக்கிஹிட் டோவும் பேரரசி மிச்சிகோவும் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அதிகாரத்துவ பகல் விருந்து வழங்கி சிறப்பிக்க விருக்கின்றனர். பிரதமர் லீ நான்கு நாள் அதிகாரத்துவ தோக்கியோ பயணத்தை நேற்று தொடங்கினார். ஜப்பானியப் பேரரசரும் அவரது துணைவியும் ஆகக் கடைசியாக 2007 மார்ச் மாதம் திரு லீக்கு தேநீர் விருந்துபசரிப்பு நடத்தினர். சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 50 ஆண்டுகால அரசதந்திர உறவின் அடையாள மாகத் திரு லீயின் பயணம் திகழ்கிறது. சென்ற ஆண்டு மார்ச் மாதம் காலமான முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் சார்பில், வெளிநாட்டுப் பிரமுகருக்கான ஜப்பானின் உயரிய கௌரவத்தைத் திரு அபேயிடமிருந்து திரு லீ பெற்றுக்கொள்வார்.

இருநாட்டு உறவின் வளர்ச் சிக்குத் திரு லீ குவான் இயூ பல ஆண்டுகாலம் ஆற்றிய பங்களிப் புக்காக மதிப்புமிக்க பவ்லாவ்னியா மலர் கிராண்ட் கோர்டன் விருது வழங்கப்படுகிறது. ஜப்பான் அவருக்கு வழங்கும் இரண்டாவது விருது இது. முன்னதாக 1967ம் ஆண்டு உதய சூரியன் கிராண்ட் கோர்டன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர். புதன்கிழமை நடைபெறும் இருதரப்பு மாநாட்டின்போது திரு அபே பிரதமர் லீயிடம் விருதை வழங்குவார். அதன்பிறகு, பிரதமர் லீக்கும் சிங்கப்பூர் பேராளர்க ளுக்கும் விருந்து நடத்தப்படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’