மார்பகப் புற்று: 40% மூத்த பெண்கள் பரிசோதனை

கடந்த இரண்டு ஆண்­டு­களில் சிங்கப்­பூ­ரில் வயதான பெண்­களில் 40 விழுக்­காட்­டுக்­கும் குறை­வா­ன­வர்­களே மார்­ப­கப் புற்­று­நோய் குறித்த மருத்­துவப் பரி­சோ­தனையை மேற்­கொண்­டுள்­ள­னர். நேற்று வெளி­யி­டப்­பட்ட புள்ளி விவ­ரங்களின்­படி 50 வய­துக்­கும் 69 வய­துக்­கும் இடைப்­பட்ட பெண்­களில் 38.9 விழுக்­காட்­டி­னரே இந்தப் பரி­சோ­தனையை மேற் கொண்டுள்­ள­னர் என்று சுகாதார மேம்பாட்­டுக் கழகம் தெரி­வித்­துள் ­ளது. சிங்கப்­பூ­ரில் பெண்­களி­டம் மார்பகப் புற்­று­நோய் பர­வ­லாகக் காணப்­படும் நிலை­யி­லும் பாதிக்­கும் குறை­வா­னவர்­களே பரி­சோ­த னையை மேற்­கொள்­கின்ற­னர். சிங்கப்­பூர் புற்­று­நோய் பதி­வ­கத்­தின்­ விவரங்களின்படி 2010ஆம் ஆண்­டுக்­கும் 2014ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் மொத்தம் 9,274 பேருக்குப் புதிதாக மார்­ப­கப் புற்­று­நோய் ஏற்­பட்­டி­ருப்­பது கண்ட­றி­யப்­பட்­டது.

மெமோ­கி­ராம் எனப்­படும் மார்­ப­கப் புற்­று­நோய் பரி­சோ­தனை முறை நம்ப­கத்­தன்மை­யா­னது. இது, மார்பகப் புற்­று­நோய்க் கட்­டி­கள் கைகளால் உண­ரக்கூடிய நிலைக்கு முந்திய நிலை­யி­லேயே கண்ட­றி­யக் ­கூ­டி­யது. முன்­கூட்­டியே கண்ட­றி­வ­தால் புற்­று­நோ­யி­லி­ருந்து குணம்­பெ­றும் வாய்ப்­பு­கள் அதிகம் உள்­ள­தால் இந்தப் பரி­சோ­தனையைச் செய்­து­கொள்ள பெண்கள் ஊக்­கு­விக்­கப் ­படு­கின்ற­னர். முன்னரே கண்ட­றிந்தால் சிறிய துளை­யிட்டு அறுவை சிகிச்சை செய்­ய­லாம், ஒரு தடவை கதி­ரி­யக்க சிகிச்சை போதுமானது, ‘கீமோ­தெ­ரபி’ வேண்­டி­ய­தில்லை என்று சிங்கப்­பூர் தேசிய புற்­று­நோய் நிலை­யத்­தின் மருத்­து­வர் வெரோனிக் டான் கூறினார். மார்­ப­கப் புற்­று­நோய் குறித்து பெண்­களி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தும் நோக்கில் உரைகள், கருத்­த­ரங்­கு­கள், சாலைக் காட்­சி­கள் எனப் பல நட­வ­டிக்கை­கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன.

Loading...
Load next