ஃபிஃபா பதவிக்குப் போட்டியிடும் ஸைனுதீன் நூர்தீன்

பனாஜி: உலகக் காற்பந்துச் சம்மேளன (ஃபிஃபா) மன்றத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் ஸைனுதீன் நூர்தீன் போட்டியிடுகிறார். மன்றத்தில் உள்ள மூன்று இடங்களுக்காகப் போட்டியிடும் ஆறு பேரில் ஸைனுதீனும் ஒருவர். இந்நிலையில், கத்தாரைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் மீது ஊழல் விசாரணை நடந்து வருவதால் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்கும் உரிமை கொண்ட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி அடைந்து ஃபிஃபாவின் இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவின் கோவா மாநிலத்தில் நேற்று நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

Loading...
Load next