$500,000 செலுத்தத் தவறிய அறுவை சிகிச்சை மருத்துவருக்கு ஒரு வாரச் சிறை

நீதி­மன்ற ஆணையை அவ­ம­தித்த குற்­றத்­திற்­காக அறுவை சிகிச்சை மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று ஒரு வார காலம் சிறைத்­தண்டனை விதித்து தீர்ப் ­ப­ளித்­தது. சிங்கப்­பூர் மருத்­து­வ­ மன்றத்­திற்­கு இழப்பீடாகச் செலுத்தும்படி நீதி­மன்றம் பிறப்­பித்த ஆணையை அவ­ம­திக்­கும் வகை­யில் அந்தத் தொகை­யான $500,000ஐ செலுத்­தத் தவ­றிய மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. டாக்­டர் பாங் ஆ சான் (படம்) என்ற அந்த மருத்துவர், ஒரு தனி­யார் பொது அறுவை சிகிச்சை மருத்­து­வ­ர். நினை­வாற்­றல் இழந்து வாடும் தனது தாயைக் கவ­னித்­துக்­கொள்­ளும் பொருட்­டும் தனது நோயா­ளி ­களின் சிகிச்சைக்­கான மாற்று ஏற்­பாடு செய்­யும் பொருட்­டும் அவ­ரது தண்டனையை அக்­டோ­பர் 3ஆம் தேதி­யில் இருந்து தொடங்க நீதி­மன்றம் அனு­மதி அளித்­துள்­ளது.

மருத்­து­வர் பாங் மீது இரண்டு வெவ்­வேறு ஒழுங்கு நட­வ­டிக்கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. விசா­ர ணை­யில் அவர் மருத்­துவ ஒழுங்கு நெறி­முறை­களை மீறி செயல்­பட்­டது தெரி­ய­வந்தது. மருத்­துவ நெறி­முறை­களின்­படி தொழில்ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப் ­ப­டாத சிகிச்சை முறை­களை மருத்­து­வர்­கள் கையா­ளக் கூடாது. அந்த முறை­யில் மருத்­து­வர் பாங், 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை­யி­லும் வயிற்­றுக்­கோ­ளாறு பிரச்­சினைக்­காக வந்த சில நோயா­ளி­களின் வயிற்­றின் உட்­புற சோதனை­களுக்கு, மருத்­து­வத் துறை­யில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத எண்­டோஸ்­கோப்­பிக் குழாயை வாய் வழி­யாக வயிற்­றுக்­குள் செலுத்தி சோதனை மேற்­கொண்ட­தா­கத் தெரி­கிறது.

இதன் அடிப்­படை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட புகாரை­ய­டுத்து சிங்கப்­பூர் மருத்­துவ மன்றத்­தின் ஒழுங்கு நட­வ­டிக்கைக் குழு 2010 செப்­டம்பர் மாதம் விசா­ரணையைத் தொடங்­கி­யது. விசா­ரணை­யில் அவர் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத சோதனைக் குழாய் கரு­வியைப் பயன்­படுத்­தி­யது தெரிய வந்தது. இந்தச் சோதனைக் குழாய் கரு­வியை உள்­வாங்க முடி­யாத நிலை­யில் இருந்த நான்கு மூத்த நோயா­ளி­களி­டம் டாக்­டர் பாங் சோதனை மேற்கொண்டிருக்கிறார். இது இவ­ரால் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட சோதனைக் குழாய்க் கரு­வி­யா­கும்.

Loading...
Load next