வலைப்பதிவாளர் ஏமஸ் யீ எஞ்சிய மூன்று குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்

இளம் வலைப்­ப­தி­வா­ளர் ஏமஸ் யீ, மதரீதி­யான உணர்­வு­களைக் காயப்­படுத்­தி­ய­தாக தம் மீது சுமத்­தப்­பட்ட எஞ்­சிய மூன்று குற்­றச்சாட்டுகளையும் நேற்று நீதிமன்றத்தில் ஒப்­புக்கொண்டார். முஸ்­லிம் மத உணர்­வு­களைக் காயப்­படுத்­தும் நோக்­கில் ஒரு புகைப்­ப­டத்தை­யும் இரண்டு காணொ­ளி­களை­யும் ஏப்­ரல் 17ஆம் தேதிக்­கும் மே 19ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வலைத் தளத்­தில் பதிவு செய்த குற்­றத்தை நேற்று நீதி­மன்றத்­தில் 17 வயது ஏமஸ் யீ ஒப்­புக்­கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்­கிய இந்த விசா­ரணை, ஏமஸ் யீ குற்­றங்களை ஒப்­புக்­கொள்ள முனைந்ததை­ய­டுத்து ஒரு முடி­வுக்கு வர­வுள்­ளது. ஏமஸ் யீ, தமக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த 8 குற்­றச்­சாட்­டு ­களை­யும் முன்­ன­தாக மறுத்­தி­ருந் தார். அவற்­றில் காவல் நிலை­யத்­தில் முன்­னிலையா­கா­தது, மத உணர்­வு­களைக் காயப்­படுத்­தி­யது ஆகிய குற்­றங்களும் உள்­ள­ டங்­கும். இது­வரை குற்­றங்களை ஒப்­புக்­கொள்­ளா­மல் மறுத்­து­ வந்த ஏமஸ் யீ, விசா­ரணை­யின் மூன்றா­வது நாளன்று திடீ­ரென பல்டி அடித்­துள்­ளார். தம் மீது சுமத்­தப்­பட்ட இரண்டு குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக் கொண்டார். 2015 டிசம்பர் 14, 2016 மே 10 ஆகிய தேதி­களில் ஜூரோங் காவல் நிலை­யத்­தில் முன்­னிலை­யா­காத குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்டார். இக்­குற்­றங்களுக்கு தலா ஒரு மாதச் சிறைத் தண்டனை­யும் $1,500 அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். நான்கா­வது நாள் விசா­ரணை­யின்­போது மற்ற மூன்று குற்­றச்­ சாட்­டு­களை­யும் ஒப்­புக்­கொண் டார். ஆகஸ்ட் 24ஆம் தேதி, ஒரு ஃபேஸ்­புக் பதிவு, ஒரு வலைப் ­ப­திவு ஆகியவற்றின் மூலம் முஸ்­லிம்­களின் மத உணர்­வு­களைக் காயப்­படுத்­திய குற்­றத்தையும் ஒப்­புக்­கொண்டார். அதேபோல் கிறிஸ்துவர்களின் மத உணர்வைக் காயப்படுத்தும் வகையில் காணொளி வெளியிட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக் கொண்டார். இந்தக் குற்­றங்களுக்­குத் தகுந்த தண்டனை அளிக்­கு­மாறு அர­சாங்க வழக்­க­றி­ஞர் மாவட்ட நீதி­பதி ஓங் ஹிங் சுன் முன்­னிலை­யில் இன்று வாதி­டு­வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!