ஜாலான் டுசுனில் ஆயுதம் தாங்கி கொள்ளை; 27 வயது ஆடவர் கைது

பாலஸ்டியர் சாலை அருகேயுள்ள ஜாலான் டுசுன் என்னுமிடத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 27 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள் ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் 28 வயது பெண்மணி ஒருவர் போலிசில் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில், ஜாலான் டுசுன் பகுதியில் தம்மிடம் இருந்து 1,500 வெள்ளிப் பணமும் 1,000 யுவானும் ஆயுதம் தாங்கிய கொள்ளையன் ஒருவனால் கொள்ளை யடிக்கப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் தங்ளின் காவல் நிலைய அதிகாரிகள் சை சீ ரோட்டில் ஆடவர் ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யூனோஸ், பாலஸ்டியர் வட்டாரங்களில் இதுபோன்ற பல குற்றங்களில் அவர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படித் தண்டனையும் கிடைக்கலாம்.

Loading...
Load next