“சிங்கப்பூரும் ஜப்பானும் புத்தாக்கத்தில் ஒன்றுக்கொன்று பலனடையும்”

ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிங்கப்­பூரை இந்த வட்­டா­ரத்­தின் வலு­வான விற்­பனைத் தள­மா­கப் பயன்­படுத்­திக்­கொள்­ள­லாம் என்று வர்த்­த­கம், தொழில்­துறைக்­கான மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் தெரி­வித்­திருக்கிறார். புத்­தாக்­க உருவாக்கத்தில் வலு­வான நிலை­யில் உள்ள இந்த இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று பல­னடைந்து கொள்­ள­லாம். புத்­தாக்­கங்களை உரு­வாக்­கும் நோக்­கில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்களு­டன் ஒருங்­கிணைந்து செயல்­படும் வகை­யில் தொழில் பங்கா­ளி­களை இணைக்­கும் சூழலை சிங்கப்­பூர் கொண்­டுள்­ளது. இந்த இரு நாடு­களின் 50 ஆண்டு கால நல்­லு­றவைக் குறிக்­கும் வகை­யில் வர்த்­தக மாநாடு நடத்­தப்­படுவதை அமைச்­சர் சின் குறிப்­பிட்­டார். ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளி­தழ், ஜப்­பா­னிய ஊட­கக் குழு­ம­­மான ‘நிக்­கெய் பப்­ளி­கே­ஷன்ஸ்’ ஆகி­யவை இணைந்து அந்த மாநாட்­டுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்தன.

ஜப்­பா­னிய தோல் பரா­ம­ரிப்பு உற்­பத்­தி­யான ‘எஸ்­கேII’ சிங்கப்­பூ ­ருக்கு வெளி­யி­லும் சந்தைப்படுத்தப் பட்டுள்­ளது. அத­னுடைய தொடர் உரு­வாக்­க­மான ‘எஸ்­கேII மென்’ சிங்கப்­பூர் நிறு­வ­னங்கள் மூல­மாக உரு­வாக்­கப் பட்­டுள்­ளது. ஜப்­பா­னின் தக­வல், தொடர்பு தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான என்­இசி, 2013ஆம் ஆண்­டில் சிங் கப்­பூ­ரில் புதிய பொது பாது­காப்­புத் தீர்­வு­களை உரு­வாக்­கும் சோதனைத் திட்­டத்­தின் ஒருங்க மைப்­புக்குத் தலைமை தாங்­கி­யதை அமைச்­சர் சிம் சுட்­டிக் ­காட்­டினார். ஆசி­யான், சீனா, இந்­தியா ஆகிய மிகப்­பெ­ரும் சந்தை­களை அரு­காமை­யில் கொண்­டுள்­ளது சிங்கப்பூரின் சொத்து என அவர் கூறினார். அதன் கார­ண­மா­கவே ஜப்­பா­னிய மருந்­து­வகை உற்­பத்­தி­யா­ள­ ரான டாகெடா, சிங்கப்­பூ­ரில் அதன் தலைமை­ய­கத்தை அமைப்­ப­தாக அறி­வித்­தார். அதைப்­ போ­லவே விநி­யோ­கச் சேவை வழங்­கும் ஜப்­பா­னிய நிறு­வ­ன­மான டா-கி-பின், இந்த வட்­டா­ரச் சந்தையை ஆய்வு செய்­வ­தற்­காக இங்கு ஒரு மையத்தைத் தொடங்­கி­யுள்­ளதை­யும் அமைச்­சர் சிம் சுட்­டிக்­ காட்­டினார்.