பிரதமர் லீ: வெளியுறவில் உறுதியான நிலைவேண்டும்

சிங்கப்பூர் நேரத்துக்கு ஏற்ப சாய்ந்து செயல்படும் நாடு என்ற எண்ணம் மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார். "சிங்கப்பூர் தனக்குச் சொந்த மான, உறுதியான ஒரு நிலையை கொண்டிருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் எந்த நாட்டில் எந்தத் தலைநகரில் இருந்தாலும் தன் சொந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்," என்று திரு லீ குறிப்பிட்டார். பிரதமர், சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந் திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டு காலம் ஆவதைக் குறிக்கும் வகை யில் அந்த நாட்டிற்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண் டிருந்தார். அந்தப் பயணம் நேற்று முடிந்தது. அப்போது தோக்கியோ வில் செய்தியாளர்களிடம் திரு லீ சிங்கப்பூரின் அடிப்படை வெளி யுறவுக் கொள்கை அணுகுமுறை பற்றி பேசினார்.

"நீங்கள் உரையாற்றும்போது அந்த உரையின் சாராம்சம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் முயன்று வரு கிறேன். வா‌ஷிங்டன், ஹாங்சூ, தோக்கியோ, ஐரோப்பா அல்லது மாஸ்கோ எங்கிருந்தாலும் அங்கு தலைவர்களுடன் பேசும்போது அவர்களிடம் நான் கூறுவதும் இதுதான்," என்றார் திரு லீ. சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை பற்றி குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூருடன் தோழமை உணர்வைக் கட்டிக் காக்க விரும்பும் எல்லா நாடுகளு டன் நட்புறவைக் கட்டிக்காப்பதே அந்த அணுகுமுறை என்றார்.

இருந்தாலும் சிங்கப்பூரின் நட்பு நாடுகளிடையே நிலவும் உறவு, அப்போதைக்கு அப்போது தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சினைப் போன்ற பிரச்சினைகளால் சிக்க லாகக்கூடும் என்பதைப் பிரதமர் ஒப்புக்கொண்டார். "அத்தகைய சூழ்நிலைகளில் நாம் எந்த நிலையை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும். பிரச்சி னையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளோடும் நமது உறவைக் கட்டிக்காக்க நம்மால் எந்த அள வுக்கு முடியும் என்பதையும் பற்றி நாம் முடிவு செய்ய வேண்டியி ருக்கும்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!