உலக வரிசையில் முதல் பத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், டைம்ஸ் உலக உயர்கல்வி நிலையங்கள் பட்டியலில் தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட எட்டு ஏட்டுக்கல்விப் பாடங்களில் இரண்டில் அது இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத் துறையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் சேர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

கணினி அறிவியல் துறையில் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்திற்கு 10வது இடம் கிடைத்திருக்கிறது. டைம்ஸ் உலக உயர்கல்வி நிலையங்கள் பட்டியலில் இந்த ஆண்டு முதன்முதலாக கணினி அறிவியல் புதிய பிரிவாக சேர்க்கப்பட்டது. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் ஆசியாவின் ஒரே ஒரு பல்கலைக்கழகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்தான். இந்தப் பட்டியலில் ஏழு பாடப்பிரிவுகளைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் ஐந்தில் ஒன்றாக இருக்கிறது.

ஆறு பாடங்களைப் பொறுத்தவரையில் ஸ்டான்ஃபோர்ட், ஹார்வர்ட் ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. டைம்ஸ் நிறுவனம் ஒரு வாரத்திற்கு முன்பு ஒட்டுமொத்த உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலை வெளியிட் டது. ஆசியாவில் தலைசிறந்த பல்கலைக் கழகமாகத் திகழ்கின்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், அப்பட் டியலில் 24வது இடத்தில் இருக்கிறது. நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் 54வது இடத்தில் இருக்கிறது.

Loading...
Load next