$1.1 மி. கையாடியதற்கு ஆறு ஆண்டு சிறை

சிங்கப்பூரைச் சேர்ந்த சீமாட்டி ஒருவரிடமிருந்து 1.1 மில்லியன் வெள்ளி கையாடிய குற்றத்துக்காக முன்னாள் சுற்றுப்பயண வழிகாட்டி யாங் யிங்குக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. திருவாட்டி சுங் கின் சுன் சீனாவுக்குப் பயணம் மேற் கொண்டிருந்தபோது அவருடன் 42 வயது யாங்குக்கு நட்பு ஏற்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வந்த யாங், இயோ சூ காங் வட்டாரத்தில் அமைந்துள்ள திருவாட்டி சுங்கின் பங்களா வீட்டில் குடியேறினார். திருவாட்டி சுங்கிடமிருந்து 2010ஆம் ஆண்டில் 500,000 வெள்ளியையும் 2012ஆம் ஆண்டில் 600,000 வெள்ளியையும் கையாடியதை யாங் ஒப்புக் கொண்டார்.

89 வயது திருவாட்டி சுங்குக்கு 2014ஆம் ஆண்டில் நினைவிழப்பு நோய் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது. இனி இதைப் போன்ற குற்றங்களை யாரும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த யாங்குக்கு கடுமையான தண்ட னையாக 10லிருந்து 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் படவேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதைவிட அதிகமான தொகை கையாடியவர்களுக்கு 10லிருந்து 12 ஆண்டுகளைவிட குறைவான தண்டனைக் காலம் விதிக்கப்பட்டதை நீதிபதி பாலா ரெட்டி சுட்டினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். படங்கள்: திருவாட்டி வாங்

19 Nov 2019

சிறுவன் குடித்த 'ஸ்மூதி'யில் கண்ணாடித் துகள்கள்; மன்னிப்புக் கோரிய உணவகம்

கணவருடன் சேர்ந்து $191,000 தொகையை மோசடி செய்த லூயிஸ் லாய் பெய் சியனுக்கு சிறைத் தண்டனை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை

பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய 42 வயது ஜெனி சான் யுன் ஹுவிக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

பணிப்பெண் வதை; பெண்ணுக்கு சிறை