வெளிநாடு வாழ் சிங்கப்பூரருக்கும் மெடி‌ஷீல்டு லைஃப் காப்புறுதி

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப் பூரர்களும் மெடி‌ஷீல்டு லைஃப் மருத்துவக் காப்புறுதித் திட்டத் துக்குத் தொடர்ந்து தகுதி பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் சிலர், குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் மெடி ‌ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத் துக்காகச் செலுத்தவேண்டிய சந்தா தொகையிலிருந்து விலக்கு பெறலாம். மெடி‌ஷீல்டு லைஃப் மன்றத்தின் இந்தப் பரிந்துரைகளை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்பு வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களிடமிருந்தும் உள்ளூ ரிலேயே வசிக்கும் சிங்கப் பூரர்களிடமிருந்தும் மன்றம் கருத்துகளைச் சேகரித்தது.

“இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரமாகும். சிங்கப்பூரர்களில் பல்வேறு தரப்பினரின் மாறுபட்ட சூழ்நிலைகளை மன்றம் கருத்தில் கொண்டது. அனைத்து சிங்கப்பூரர் களின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை மெடி‌ஷீல்டு லைஃப் தொடர்ந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் இலக்கு,” என்று மன்றத் தலைவர் திருமதி ஃபாங் ஆய் லியேன் தெரிவித்தார். மெடி‌ஷீல்டு லைஃப் திட்டத் துக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியது. மெடி‌ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்துக்கு உட்படும் வெளி நாடு வாழ் சிங்கப்பூரர்கள் சிங்கப் பூரில் மருத்துவ சிகிச்சை பெறும்போது திட்டத்தால் பலன் அடையலாம். இருப்பினும், வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க முடிவெடுத் துள்ள சில சிங்கப்பூரர்கள், மெடி‌ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தால் தங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்று கருதுவதை மன்றம் அடையாளம் கண்டது.

Loading...
Load next