சுடச் சுடச் செய்திகள்

பிடோக் நார்த் வட்டாரத்தில் இனி ஸிக்கா பாதிப்பில்லை

பிடோக் நார்த் வட்டாரத்தில் இனி ஸிக்கா பாதிப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிடோக் நார்த் அவென்யூ 3, பிடோக் நார்த் அவென்யூ 2, பிடோக் நார்த் ஸ்திரீட் 3 ஆகிய இடங்களையும் சேர்த்து இந்த வட்டாரத்தில் ஐந்து பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக இந்த வட்டாரத்தில் யாருக்கும் ஸிக்கா தொற்று ஏற்படவில்லை. சிங்கப்பூரில் இதுவரை 398 பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பீஷான் ஸ்திரீட் 12ல் ஸிக்காவால் ஏற்பட்டிருந்த பாதிப்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கடந்த புதன்கிழமையன்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்தது. சிங்கப்பூரில் தற்போது ஏழு வட்டாரங்கள் ஸிக்காவால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு வட்டாரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக ஸிக்கா தொற்று ஏற்படவில்லை. அல்ஜுனிட் வட்டாரத்தில் மட்டும் மேலும் ஐந்து பேருக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இதுவரை 298 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon