‘கேபிஇ’ விரைவுச்சாலையில் ‘இஆர்பி’

நிலப்போக்குவரத்து ஆணையம் காலாங்- பாயலேபார் விரைவுச்சாலையில் மின்னியல் சாலைக் கட்டணத்தை (இஆர்பி) முதல் முறையாக அறிமுகப்படுத்த திட்டமிடுவதாக நேற்று கூறியது. அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும் என்று வாரியம் சொன்னது. கேபிஇ சுரங்கப்பாதைக்கு முன்னால் இருக்கும் மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலை இயக்க ஆலோசித்து வருவதாக வாரியம் தெரிவித்தது. வடக்கு-கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி வருவதாக வாரியம் கூறியது. பொங்கோல் வட்டாரவாசிகள் மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு செல்ல ‘சிட்டி’ நேரடிப் பேருந்துச் சேவை எண் 666 கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. காலை மாலை உச்ச நேரங்களில் இந்த சேவை இயங்கும்.2016-10-01 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது