840,000 குடும்பம் பயனீட்டுக் கட்டணக் கழிவு பெறும்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு களில் வசிக்கும் சுமார் 840,000 குடும்பங்கள் இம்மாதம் பயனீட்டுக் கட்டணக் கழிவுக ளைப் பெறும் என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்தது. ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போர் $65, மூவறை வீடுக ளுக்கு $60, நாலறை வீடுக ளுக்கு $55, ஐந்தறை வீடுக ளுக்கு $50, எக்ஸ்சகியூடிவ் வீடுகள் அல்லது பல தலை முறை வீடுகளில் வசிப்போ ருக்கு $45 என்று கட்டணக் கழிவுகள் அளிக்கப்படும். ஒவ்வொரு காலாண்டுக்கும் வழங்கப்படும் இந்தக் கழிவுகள் மூலம் அரசுக்கு ஓர் ஆண் டுக்கு $190 மில்லியன் செல வாகிறது.