முரளி: அகிம்சையின் வெற்றி இன்றும் பொருந்தும்

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரில் பல சமய, பல இன மக்கள் பரஸ்பர மரியாதையுடன் தொடர்ந்து வாழ பல்வேறு சமூ கங்களுக்கு இடையே நிலவும் பொதுவான பண்புநலன்கள் வலியுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு மகாத்மா காந்தி யின் கோட்பாடுகள் சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரைச் சென்றடைய உதவுவதுடன், அன் போடு அனைவரும் இணைந்து மனித நேயத்துக்குத் துணை நிற்க உதவுவதாக புக்கிட் பாத் தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கூறி யுள்ளார்.

“நம்மைச் சுற்றி என்ன நடக் கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பயங்கரவாதத் தாக்கு தல்கள், மிரட்டல்கள் உலக நாடு களை அச்சுறுத்துகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட இன, சமய பூசல்கள் பரவ லாக நடக்கின்றன. இத்தகைய பூசல்கள் காந்தி வாழ்ந்த கால கட்டத்திலும் இடம்பெற்றன,” என்றார் அவர். மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு ரேஸ் கோர்ஸ் லேனில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண் டபத்தில் நேற்று நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு முரளி உரையாற் றினார்.

Loading...
Load next