மானபங்கக் குற்றத்திற்காக ஆடவருக்கு 11 ஆண்டுகள் சிறை

சிலோசோ கடற்கரையில் குடிபோதை யில் இருந்த 20 வயது மாதுவை மானபங்கப்படுத்திய 27 வயது ஆடவருக்கு நேற்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. பிரேம் நாயர் (படம்) என்ற அந்த ஆடவர் செந்தோசா கடற் கரையில் சுற்றுக்காவல் அதிகாரியாக இருந்தபோது இந்தக் குற்றத்தைப் புரிந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம்தேதி அந்த மாது தனது தோழி யுடன் கடற்கரையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மது அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் பிரேம் அவர்களிடம் பேச்சுக் கொடுத்து ‘மது விளையாட்டு’ விளையாட அழைத்தார். மதுவைத் தொடர்ந்து அருந்திய வுடன் அந்த மாது மயக்கநிலை அடைந்தார். பின்னர் வீடு திரும்ப எண்ணம் கொண்டு அவரது தோழி கைப்பை எடுக்கச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் பிரேமையும் அந்த மாதுவையும் காணவில்லை. அதன் பின்னர் கடற்கரையில் இன்னொரு பகுதியில் பிரேம் தன்னுடன் அழைத்து சென்ற மாதுவை மானபங்கம் செய்தார். அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்த இருவர் போலிசுக்குத் தகவல் அளித்தனர். பிரேம் பின்னர் கைதானார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’