மக்கள் கழகத்தின் ‘சமுதாயம் 2020’ பெருந்திட்டம்

வில்சன் சைலஸ்

தனியார் பேட்டைகள், கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றில் வசித்து வரும் குடியிருப்பாளர்களைக் கூடுதலாக அணுகி மக்களுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மக்கள் கழகம். இத்துடன், குடியிருப்பாளர்க ளுடன் அணுக்கமாக செயல்பட்டு அவர்களின் அச்சங்கள், அக்க றைக்குரிய விவகாரங்கள், ஆர்வங்களைப் புரிந்துகொண்டு வெவ் வேறு தரப்பினருக்கு ஏற்ற வகை யில் அரசாங்கக் கொள்கைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் கழகம் ஈடுபட்டு வருகிறது என்றார் கழகத்தின் துணைத் தலைவர் திரு சான் சுன் சிங். 'சமுதாயம் 2020' பெருந்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கடந்த புதன்கிழமை பேசிய பிர தமர் அலுவலக அமைச்சருமான திரு சான், அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துவதுடன் மக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை அதிகரிப்பது பற்றி கூறினார்.

"குடியிருப்பாளர் கலந்தாய்வுக் குழு, சமூக மன்ற நிர்வாகக்குழு, குடியிருப்பாளர் மன்றம் என அடித்தள அமைப்புகளுக்கு அப் பாற்பட்டு தனியார் இடங்களில் குடியிருப்பவர்களையும் எல்லைகள் கடந்து சேவையாற்றி வரும் தன் னார்வக் குழுக்களையும் அணுகுவதில் கழகம் கூடுதல் கவனம் செலுத்துகிறது," என்றார் அமைச் சர். சமுதாயத்தின் அங்கமாக திக ழும் அடித்தள அமைப்புகளுடன் இணைய பலரும் முன்வருவது வலுவான பிணைப்பின் அஸ்திவா ரமாக விளங்குகிறது என்றும் குடியிருப்பாளர்களின் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கிறது என்றும் அமைச்சர் சான் குறிப்பிட்டார். மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ற வாறு சேவையாற்ற அடித்தளத்தை வலுப்படுத்த முயல்கிறோம் என்ற திரு சான், அரசாங்கம் வெளியிடும் கொள்கைகளை வெவ்வேறு தரப்பி னருக்கு ஏற்றவாறு கொண்டு செல்வது அவசியம் என விளக் கினார். "வயது, சமூகப் பின்னணி, மொழி, குடியிருக்கும் வட்டாரம் ஆகிய பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அரசாங்கம் வெளி யிடும் கொள்கைகளை எடுத்துரைப்பது அவசியம். முன்பு போல அனைவருக்கும் ஒரே மாதிரியான விதத்தில் தகவலைக் கொண்டு செல்ல முடியாது," என மேலும் திரு சான் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!