அனுமதி இன்றி பந்தயம்: இருவருக்குத் தண்டனை

போலிசின் அங்கீகாரமும் அனுமதியும் இல்லாமல் சட்டவிரோத மாக சைக்கிள் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்து பந்தயத்தை நடத்திய இரண்டு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக் கிறது. முன்னாள் சைக்கிள் கடை உரிமையாளர் எரிக் கூ ‌ஷி யான், 29, திட்டத்துறை நிர்வாகி ஸுல்கிஃப்லி அவாப், 40, என்ற அந்த இருவரும் தலா நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் சென்ற ஜூன் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவருக் கும் ஏழு நாள் சிறைத்தண்ட னையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இருவருக்கும் எதிரான இதர 12 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தத்தில் அந்த இரு வரும் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் எட்டு பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரி விக்கப்பட்டது.

அந்தச் சைக்கிள் பந்தயத் திற்கு ‘ஹோலிகிரிட்’ என்று பெயர். தங்கள் கட்சிக்காரர் களுக்குப் பெயரளவிலான சிறைத்தண்டனை விதிக்கும்படி இந்த இரண்டு பேரின் சார்பிலும் முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண் டனர். தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி கரோல் லிங், இருவருக் கும் தலா இரண்டு நாள் சிறைத் தண்டனை விதித்தால் அது போதுமானதாக இருக்காது என்று தான் கருதுவதாகத் தீர்ப் பில் குறிப்பிட்டார்.

சைக்கிள் கடை உரிமையாளர் எரிக் கூ (வலது) நிர்வாகி ஸுல்கிஃப்லி அவாப் இருவருக்கும் தலா ஏழு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $5,000 அபராதமும் இவர்கள் செலுத்த வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்