டெங்கி ஊசிமருந்துக்கு சிங்கப்பூரில் அனுமதி

டெங்கி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளுக்கு எதிரான ஒரு தடுப்பு மருந்தை சிங்கப்பூரில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த மருந்து இன்னும் ஒரு சில மாதங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 'சனோஃபி பாஸ்டர்' என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் 'டெங்வாக்சியா' என்ற இந்த ஊசி மருந்தை ஓர் ஆண்டில் மூன்று தடவை போட்டுக்கொண்டால் போதும். மூன்றாவது தடவை போட்டுக்கொண்டது முதல் நான்கு ஆண்டு காலத்திற்கு மருந்து பலன் தரும். சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று இந்த விவரங்களை அறி வித்தது. இந்த மருந்து இப்போது 12 வயது முதல் 45 வயது வரைப்பட்ட மக்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதர வயதுப் பிரிவினர் இந்த ஊசிமருந்தைப் போட்டுக்கொள்ள விரும்பினால் அவர்கள் மருத்து வரின் ஆலோசனையை நாட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது. புதிய ஊசிமருந்து சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

இந்த மருந்து மூலம் ஏற்படக் கூடிய நன்மைகள் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைவிட அதிகமாக இருக்கின்றன என் பதால் சிங்கப்பூரில் டெங்வாக்சியா அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊசிமருந்தைத் தயாரித்த நிறுவனம் 41,000 பேரை உள்ள டக்கி மொத்தம் 24 மருந்தக ஆய்வுகளை நடத்தியது. அந்த ஆய்வுகளை சிங்கப்பூர் அதிகாரி கள் மறுபரிசீலனை செய்தனர். இந்த மறுபரிசீலனையில் இந்த ஆணையத்தின் மருத்துவ ஆலோ சனைக் குழு, டெங்கி வல்லு நர்கள் குழு ஆகிய இரு அமைப்பு களையும் சேர்ந்த நிபுணர்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டனர். லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் நடத்தப்பட்ட இரண்டு பெரிய மருந்தக ஆய்வு கள் மூலம் இந்த மருந்து நல்ல பலனளிப்பதாகத் தெரியவந்திருக் கிறது. பொதுவாக இந்த மருந்து பாதுகாப்பான ஒன்றுதான் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!