எரிசக்தி சிக்கனம்; 17 பேருக்கு விருது

எரிசக்தியைச் சிக்கனப்படுத்தும் முயற்சிகளை எடுத்ததற்காக 17 பேருக்கு விருது வழங்கி சிறப் பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விருதைப் பெற்றவர் களில் நிறுவனங்களும் அடங் கும். ஜூரோங்கில் இருக்கும் தேவன் நாயர் வேலைநியமன, வேலை தகுதி கழகத்தில் நேற்று ‘ஆறாவது எரிசக்தி சிக்கன தேசிய பங்காளித்துவ விருது’ வழங்கப்பட்டது. விருது வென்ற அமைப்புகளில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக் கக் கல்லூரியும் ஒன்று. இந்தக் கல்லூரி புதிய செல்பேசிச் சேவை ஒன்றை உருவாக்கியிருக் கிறது. கல்லூரி அறைகளில் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்பதை அந்தச் செயலி அதனைப் பயன்படுத்து வோருக்குத் தெரிவிக்கும். விரிவுரை அறைகளில் அல்லது வகுப்பறைகளில் யாரும் இல்லை என்றால் அலுவலகத்தில் இருந்தபடியே ஒரு பொத்தானை அழுத்தி அந்த அறைகளில் குளிரூட்டிச் சாதனத்தை ஊழியர் அணைத்துவிடலாம்.

எளிமையான இந்த ஏற்பாட் டின் மூலம் இந்தக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டிற்கும் சென்ற ஆண்டிற்கும் இடையில் ஓர் ஆண்டுக்கு 12.1% எரிசக்தி மிச்சமடைந்திருக்கிறது. ‘மோலக்ஸ் சிங்கப்பூர்’ என்ற நிறுவனம் நேற்றைய நிகழ்ச்சியில் விருது பெற்றது. இந்த நிறுவனம் தன்னுடைய எரிசக்தி சிக்கன நடவடிக்கைகள் காரணமாக ஆண்டுக்கு $1.29 மில்லியன் தொகையை மிச்சப்படுத்து கிறது. சிங்கப்பூர் நிர்வாகப் பல் கலைக்கழகம் எரிசக்திப் பய னீட்டைக் கண்காணிக்கும் 200 சாதனங்களையும் 700 உணர்வுச் சாதனங்களையும் அமைத்து எரி சக்திப் பயனீட்டை 33% குறைத்து ஒன்பது ஆண்டுகளில் $2 மில்லியன் தொகை யைச் சேமித்து இருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ‘உன்னத எரிசக்தி நிர்வாகம்’ என்ற பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.

Loading...
Load next