சுகாதார அமைச்சு வெளியிடும்

தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சை களுக்கான மொத்த கட்டணத் தொகை குறித்த தகவலை சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சை களுக்கான மொத்த கட்டணத் தொகை குறித்த தகவலைக் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அது வெளியிடத் தொடங்கியது. தனியார் மருத்துவமனை களிலும் இந்த முறையைக் கையாண்டால் கட்டணத் தொகை தொடர்பான தகவல் வெளிப்படை யானதாக இருக்கும் என்றும் வெளியிடப்படும் தகவலைக் கொண்டு நோயாளிகள் எங்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சை களுக்கான கட்டணம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுக் காட்டப்படும். அறுவை சிகிச்சை நிபுணருக் கான கட்டணம், உணர்வு இழப்பு மருந்து செலுத்தும் நிபுணருக்கான கட்டணம், அறுவை சிகிச்சைக் கூடம் போன்ற மருத்துவ வசதி களுக்கான கட்டணம் ஆகியவை இதில் அடங்கும். “பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கான மருத்துவர், மருத்துவமனை கட்டணங்களை வெளியிடப்படும் தகவல் தோராயமாகக் கணிக்கிட உதவும்,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்