பால்ய வயதில் கிட்டப்பார்வை எனில் பார்வை கெடும் ஆபத்து; ஆய்வு எச்சரிக்கிறது

பாலர் பருவத்தில் அல்லது தொடக்கநிலை பள்ளியில் படிக்கையில் பிள்ளைக்கு கிட்டப்பார்வை ஏற்பட்டது என் றால் வயது ஆக ஆக அந்த நிலை அதிகரிக்கக்கூடும் என் றும் கடைசியில் கண் பார்வை மங்கி அறவே பார்வை போய் விடக்கூடிய ஆபத்தும் இருக் கிறது என்றும் எச்சரிக்கப்பட்டி ருக்கிறது. சிங்கப்பூர் பிள்ளைகளி டையே அதிக கிட்டப்பார்வை குறைபாடு பற்றி சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகமும் சிங்கப் பூர் தேசிய பல்கலைக்கழகமும் 15 ஆண்டுகாலம் ஆய்வு ஒன்றை நடத்தின. அந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் மூலம் இந்த நிலவரம் தெரியவந்திருக்கிறது. சிங்கப்பூரில் 11 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட பதின்ம வயதினரில் சுமார் 70%க்கு கிட்டப்பார்வை இருக் கிறது என்பது ஆய்வு மூலம் தெரிந்தது. இவர்களில் 13 விழுக்காட்டினருக்கு கிட்டப் பார்வை அதிகமாக இருக்கிறது.

சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டு வாக்கில் 5 மில்லியன் மக்களுக்கு கிட்டப்பார்வை இருக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் மதிப் பிடுகிறார்கள். இந்த 5 மில்லியன் பேரில் 15 விழுக்காட்டினருக்கு இக் குறைபாடு அதிகமாக இருக் கும் என்று அவர்கள் குறிப் பிட்டுள்ளனர். அதி கிட்டப்பார்வை குறை பாடு என்றால் சுமார் 500 டிகிரி அளவிலான கண்ணாடியைப் போட வேண்டியிருக்கின்ற ஒரு நிலைமை என்று குறிப்பிடப் பட்டு இருக்கிறது. கண்ணில் கடுமையான கோளாறுகள் காரணமாக இத் தகைய நிலைமை ஏற்படுகிறது. கிட்டப்பார்வை என்பது ஓர் ஆயுள் முழுவதும் தொடரக் கூடிய ஒரு குறைபாடு. அது பாலர் முதல் முதியோர் வரை காணப்படக்கூடியது என்று ஆய்வு நடத்திய ஆய்வாளர்களின் தலை வரான பேராசிரியர் சா சியாங் மெய் தெரிவித்திருக்கிறார்.

சிறாரிடையே இத்தகைய குறை பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கு உள்ள முக்கியமான வழி, அந்தக் குறைபாட்டை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து தடுத்துவிடுவது தான். இதன் மூலம் அந்தக் குறை பாடு முற்றிவிடாமல் கண் பார்வை யைக் காக்க முடியும். வெளிப்புறங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டால் கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுவது தாமதப்படக்கூடும் என்று ஆய் வாளர்கள் கூறுகிறார்கள். சூரியஒளி காரணமாக கண் ணில் ஒரு ரசாயனம் வெளியாகிறது என்றும் அந்த ரசாயனம் கிட்டப் பார்வை வளர்வதை தடுத்துவிடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக் கிறார்கள். இளம்பிள்ளைகள் சொட்டுமருந் தைப் பயன்படுத்தியும் இந்தக் குறைபாட்டின் வேகத்தை தணிக்க லாம். பொதுவாக ஒரு பிள்ளைக்கு எட்டு வயதாக இருக்கும்போது கிட்டப்பார்வை ஏற்படுகிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டு களில் அது வளர்கிறது. கிட்டப் பார்வைக்குப் பரம்பரையும் சுற்றுப் புற, வாழ்க்கைப் பாணி அம்சங் களும் காரணம் என்று ஆய்வாளர் கள் தெரிவிக்கிறார்கள்.

வெளிப்புறங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டால் கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுவது தாமதப்படக்கூடும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!