சாலை விபத்தில் பாதசாரி மரணம்

வெளிநாட்டு ஊழியர் என்று நம்பப்படும் பாதசாரி ஒருவர் சாலை விபத்தில் நேற்று மாண்டார். கெப்பல் சாலையில் கார் ஒன்று அவரை மோதித் தள்ளியது. தஞ்சோங் பகார் ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று காலை 10.15 மணி அளவில் சாலை விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அந்த 35 வயது ஆடவர் இறந்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியது. பாதசாரியை மோதிய வாகனம் ஆயர் ராஜா விரைவுச்சாலைக்கு கீழே உள்ள பள்ளத்தில் கிடந்தது. 31 வயது வாகனமோட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்து நடந்த இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம், இரண்டு ஆம்புலன்ஸ்கள், ஒரு சிவப்பு ரைனோ வாகனம் அனுப்பப்பட்டன. போலிஸ் விசாரணை தொடர்கிறது. படம்: ‌ஷின்மின்

Loading...
Load next